நடிகர் சூர்யாவை எல்லாம் அப்படி பேசலாமா.. மீரா மிதுன் கைது குறித்து ஓப்பனா பேசிய சஞ்சனா சிங்!

சென்னை: கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் மீரா மிதுன் கைது குறித்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரா மிதுன் கைது பற்றி பேட்டியில் பேசியுள்ள நடிகை சஞ்சனா சிங், மற்ற நடிகர்கள் குறித்து அத்துமீறி பேசும் போதே இப்படி கைதாவார் என எதிர்பார்த்தேன் எனக் கூறியுள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

சஞ்சனா சிங் பேட்டி

2009ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். கோ படத்தில் பல்வேறு நடிகர்கள் ஆடிப் பாடும் பார்ட்டி பாடலில் தெலுங்கு லேடியாக கவர்ச்சியாக நடித்து கலக்கி இருப்பார். 11 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் அளித்துள்ள பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.

சஞ்சனா சிங் படங்கள்

சஞ்சனா சிங் படங்கள்

ரேணிகுண்டா படத்தில் அறிமுகமான நடிகை சஞ்சனா சிங் கோ, காதல் பாதை, மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல், யாருக்கு தெரியும், ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, மீகாமன், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சக்கப்போடு போடு ராஜா மற்றும் மானே தேனே பேயே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கட்டுக்கோப்பான உடல்

கட்டுக்கோப்பான உடல்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக கலக்கி வரும் நடிகை சஞ்சனா சிங் எப்போதுமே தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கடினமாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மீரா மிதுன் கைது பற்றி

மீரா மிதுன் கைது பற்றி

நடிகை சஞ்சனா சிங்கிடம் பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் அண்மையில் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, மீரா மிதுனை கைது பண்ணிட்டாங்களாங்க.. எப்போங்க? நீங்க சொல்லித் தான் எனக்கே தெரியும் எனக் கூறினார். பின்னர் நான் இதை எப்பவோ எதிர்பார்த்தேன் என்று மீரா மிதுன் குறித்து இந்த பேட்டியில் வெளுத்து வாங்கி உள்ளார்.

ஷார்ட் கட்

ஷார்ட் கட்

மீரா மிதுன் பிரபலமாக வேண்டுமானால், நல்ல நடிப்பை சினிமா படங்களில் கொடுத்தாலே போதும், அதை விடுத்து ஷார்ட் கட்டில் சோஷியல் மீடியாவில் கண்டபடி பேசினால் போதும் பிரபலமாகி விடலாம் என ஏன் சிந்தித்தார் என்றே தெரியவில்லை. அது ரொம்ப தப்பு, அப்படி போனா இப்படித் தான் போலீசில் சிக்கும் நிலை உருவாகும் என்றும் சஞ்சனா சிங் நெத்தியடியாக கூறியுள்ளார்.

சூர்யா பற்றி

சூர்யா பற்றி

ரொம்ப மோசங்க.. சினிமா துறைக்கு வந்து விட்டால் மற்ற நடிகர்கள் மீது மரியாதை செலுத்த வேண்டும். நடிகர் சூர்யாவை பற்றி எல்லாம் மீரா மிதுன் ரொம்ப கொச்சையாக பேசி எல்லை மீறி சென்றது எல்லாமே ரொம்ப டூமச், அப்பவே நினைச்சேன் இவர் சீக்கிரம் உள்ளே போக போறாருன்னு.. இந்த விசயத்துல நான் போலீஸ் பக்கம் தான் நிற்பேன், அவங்க செஞ்சது சரியான விஷயம் தான் என நடிகை சஞ்சனா சிங் கூறியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது. மேலும், பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் நம் உடன் ஷேர் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X