புடிச்சிருந்தா ஓகே சொல்லிடுவேன்.. சில்லுனு ஒரு காதல் சீரியல் நடிகை சியமந்தா ஓப்பன் டாக்!
சென்னை: சில்லுனு ஒரு காதல் சீரியல் நடிகை சியமந்தா கிரண் காதலர் தினத்தை முன்னிட்டு அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.
பொதுவாக தனக்கு காதலர் தினத்தின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை எனக் கூறும் அவர், காதல் எல்லோர் வாழ்விலும் எப்போதும் இருக்க வேண்டிய ஒரு உணர்வு என்கிறார்.

எல்லா நேரத்திலும் நாம் நம்மையும் பிறரையும் காதலித்துக் கொண்டே இருந்தால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று கூறும் சியமந்தாவுக்கு பெரிதாக புரபோஸல்கள் எதுவுமே இதுவரை வரவில்லை என்கிற ரகசியத்தையும் இந்த பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.
காதல் மீது வெறுப்பு இருந்ததே இல்லை. இதுவரை காதலில் விழுந்ததில்லை எனக் கூறும் சியமந்தா, ஒருவர் நேரில் வந்து தனது காதலை சொல்லும் போது, நிச்சயம் அவரை என் மனசுக்கு பிடித்து விட்டால் ஓகே சொல்லிவிடுவேன் என்றும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
காதலர் தினத்தை இப்பவெல்லாம் ஒரு வாரம் வச்சு கொண்டாடுறாங்க, ரோஸ் டே, சாக்லேட் டே என வித விதமா செலிபிரேட் பண்றாங்க, காதலர் தினத்துக்கு போஸ்ட் போடுறவங்களையெல்லாம் ஸ்டாக் செய்து வருகிறேன் என சில அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்துள்ளார் சியமந்தா.
சின்னத்திரையில் சிரித்த முகத்துடன் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சியமந்தாவின் இந்த பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











