தல கார் எங்க அப்பாதான் ட்யூன் பண்ணிக் கொடுத்தார்.. சில்லுக்கருப்பட்டி நிவேதிதா பேட்டி!

சென்னை: சில்லுக்கருப்பட்டி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை நிவேதிதா சதீஷ் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Thala car எங்க அப்பாதான் tune பண்ணி குடுத்தார் | Nivedhithaa Chat | Filmibeat Tamil

தல அஜித்தின் காரை தனது அப்பா தான் சில முறை ட்யூன் பண்ணிக் கொடுத்துள்ளார் என்கிற சூப்பரான தகவலையும் இந்த பேட்டியில் நிவேதிதா தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் நிவேதிதா.

சில்லுக்கருப்பட்டி மது

சில்லுக்கருப்பட்டி மது

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படத்தில் மது கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஜீப் கார் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர், அடுத்ததாக தான் நடித்து வரும் படங்கள் குறித்தும் பட்டாசு போல வெடித்து தள்ளி உள்ளார்.

செத்தும் ஆயிரம் பொன்

செத்தும் ஆயிரம் பொன்

நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் அவர் நடித்துள்ள செத்தும் ஆயிரம் பொன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சில வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நிவேதிதா.

ராதிகா ஆப்தே போல

ராதிகா ஆப்தே போல

பாலிவுட் படங்கள் மீது சிறு வயது முதலே தனக்கு மோகம் அதிகம் என்றும், தீபிகா படுகோனே உடன் தன்னை ஒப்பிட்டு வருகின்றனர் என்றும் வெட்கத்துடன் கூறும் நிவேதிதா, தனக்கு ராதிகா ஆப்தே போல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கவே விருப்பம் என்றும் கூரியுள்ளார்.

தல அஜித் காருக்கு

தல அஜித் காருக்கு

கார்கள் மீது அளவுகடந்த விருப்பம் கொண்டுள்ள நீங்கள் தல அஜித்தை எப்போதாவது சந்திக்க ஆசைப்பட்டு இருக்கீங்களா? என்ற கேள்விக்கு, சின்ன வயசுலயே நான் பார்த்துருக்கேன். எங்க அப்பா சில முறை அஜித் சார் காரை நல்லா ட்யூன் பண்ணிக் கொடுத்துருக்காரு என்றும் பேசியுள்ள வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X