19 வயசுலயே ஜட்ஜ் ஆகிட்டேன்.. பாடகி மஹதி பஜன் சாம்ராட் நிகழ்ச்சி பற்றி பேசும் பிரத்யேக பேட்டி!
சென்னை: சியான் விக்ரமின் சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற அய்யய்யோ புடிச்சிருக்கு பாடலை பாடி திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகி மஹதியின் பிரத்யேக வீடியோ வெளியாகி உள்ளது.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் ஜட்ஜாக செயல்பட்டு வரும் மஹதி, அந்த நிகழ்ச்சி குறித்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளார்.
17 வயதில் திரைத்துறையில் பாட வந்த மஹதிக்கு 19 வயதிலேயே பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் உடன் ஒரு நிகழ்ச்சியை நீதிபதியாக பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்கிற பொறுப்பு வழங்கப்பட்ட அழகான மலரும் நினைவுகளையும் இந்த பேட்டியில் கூறியுள்ளார் மஹதி.
செல்லமே, எங்கேயும் காதல், பீமா, அயன், ஒஸ்தி, வல்லவன், தேவ், காஞ்சனா என ஏகப்பட்ட தமிழ் சினிமா படங்களில் பாடல்களை பாடியுள்ள பாடகி மஹதி, கர்நாடக சங்கீதத்தில் ஏகப்பட்ட இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தி உள்ளார்.
ஆன்மிக பக்திப் பாடல்களை பாடும் ரியாலிட்டி ஷோவை கலர்ஸ் தமிழ் பஜன் சாம்ராட் எனும் பெயரில் கொண்டு வந்துள்ள நிலையில், அதற்கு நடுவராக இருந்து பணிபுரிவதை பாக்கியமாகவே கருதுகிறேன் என்றும், இந்த கொரோனா காலத்தில் இறை வழிபாடு மனதுக்கு நல்லதொரு ஆரோக்கிய அலைகளை வழங்கும் விதமாக இருக்கும் என ஏகப்பட்ட தத்துவங்களையும் போகிற போக்கில் பேசியுள்ளார்.
ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களுக்கு ஜட்ஜாக இருப்பதால், தனக்கு 40 வயசுக்கு மேல ஆகிடுச்சுன்னு சிலர் நினைக்கலாம். ஆனால், எனக்கு ஜஸ்ட் 36 வயசு தான் என சொல்லிவிட்டு சிரிக்கும் அந்த சிரிப்பை பேட்டியில் மிஸ் பண்ணாம பார்த்து மகிழுங்கள்!
உழவர்கள் பாடிய ஸ்பெஷல் பஜன் நிகழ்ச்சியெல்லாம் வேற லெவலில் வரவேற்பை பெற்றது குறித்தும் பாடகி மஹதி இந்த பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











