எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களில் காதல், கம்பீரம் என எல்லாமே இருக்கும்.. சுதா ரகுநாதன் பேட்டி!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து பின்னணி பாடகி சுதா ரகுநாதன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் என ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ள சுதா ரகுநாதன், திரை இசையிலும் கர்நாடக இசையிலும் கோலோச்சி வருகிறார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தன்னை மிகவும் பாதித்துள்ளது எனக் கூறிய அவர் எஸ்.பி.பியின் நினைவுகளையும் இந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.

பாடும் நிலா பாலுவின் பாடல்களில் காதல், வீரம், நகைச்சுவை, சின்னதாக ஒரு நக்கல், கம்பீரம் என எல்லாமே நிறைந்திருக்கும் என சுதா ரகுநாதன் கூறியுள்ளார்.
மேலும், எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எல்லாமே தனக்கு பிடிக்கும் எனக் கூறிய அவர், மலரே மெளனமா, என் இனிய பொன் நிலாவே மற்றும் ஆயிரம் நிலவே வா உள்ளிட்ட பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என எஸ்.பி.பியின் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











