பைக்கை புடிங்க டிடிஎஃப் வாசன்.. முன்னேறுனா புடிக்கவே புடிக்காது.. டிடிஎஃப் வாசன் பேட்டி!

சென்னை: சமீபத்தில் நடிகர் டிடிஎஃப் வாசனுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல் நடைபெற்றது. அதில், "விஜய் சார் துப்பாக்கியை புடிங்க சிவான்னு சொன்னாங்க, அதேபோல பைக்கை புடிங்க டிடிஎஃப்னு சொல்றாங்களா!" என்று தொகுப்பாளர் கலாய்த்தது அனைவரையும் சிரிக்க வைத்தது. இதுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லீங்கோ என்று ஜாலியாக எஸ்கேப் ஆகிவிட்டார் வாசன்.

வாசன் தனது புதிய படம் "ஐபிஎல்" பற்றி பேசுகையில், இது தனது முதல் படம் என்றும், முன்பு மஞ்சள் வீரன் படம் கைவிடப்பட்டது குறித்தும் மனம் திறந்து பேசினார். "அந்தப் படம் ரெண்டரை வருஷம் என் கூடவே வாழ்ந்துச்சு. அதை ஏத்துக்கவே முடியல" என்று வருத்தத்துடன் கூறினார்.

Interview TTF Vasan On IPL Movie Vijay Ajith amp amp His Dreams

வாழ்க்கையில் தனக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி வாசன் கூறுகையில், ஜெர்மனிக்கு செல்ல ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். அங்கு வேகக் கட்டுப்பாடு இல்லாத சாலையில் பைக் ஓட்ட வேண்டுமென்பது அவரது நீண்ட நாள் கனவாம்.

சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு வாசன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். "ஒருத்தர் வளர்ந்து வரும்போது அவரை எப்படியாச்சும் கீழ தள்ளனும்னு நெனைக்கிற ஒரு கூட்டம் இருந்துகிட்டே இருக்கு. அதைப் பத்தி கவலைப்படாம, நம்ம வேலைய பாத்துக்கிட்டே இருக்கணும்" என்றார்.

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி "ஐபிஎல்" படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு காட்சியின் தன்மைக்கு ஏற்ப பின்னணி இசை அமைப்பது சவாலாக இருந்தது என்றார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளுக்கும், சேஸிங் காட்சிகளுக்கும் மாறி மாறி இசை அமைத்தது புது அனுபவமாக இருந்தது என்று கூறினார்.

வாசனின் சினிமா பயணத்தைப் பற்றி பேசிய அஸ்வின், "குறுகிய காலத்துல இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை எப்படி உருவாக்குனீங்கனு ஆச்சரியமா இருக்கு" என்று பாராட்டினார். அதற்கு வாசன், "தப்பு பண்ணா திருத்திக்கிட்டே இருக்கணும். அதுதான் முக்கியம்" என்று பதிலளித்தார்.

வாசன் தனது ரோல் மாடல்கள் பற்றி குறிப்பிடுகையில், நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். மேலும், "அவங்க படத்துக்கு நாம எவ்வளவு சந்தோஷப்படுவோம். அவங்க கூட கம்பேர் பண்ணிக்கவே முடியாது" என்று அடக்கத்துடன் தெரிவித்தார்.

நடிகர் கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோருடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட வாசன், அவர்களிடம் தான் நிறைய கற்றுக்கொண்டதாகக் கூறினார். குறிப்பாக கிஷோரின் நேரந்தவறாமை தன்னைக் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் ஏற்பட்ட காயம் குறித்து வாசன் கூறுகையில், "பைக் ஸ்டண்ட் பண்ணும்போது கை, கால் எல்லாம் வீங்கிடுச்சு. ஆனா அதையும் மீறி ஷூட்டிங்ல கலந்துக்கிட்டேன்" என்றார். அந்த அர்ப்பணிப்பைக் கண்டு படக்குழுவினர் வியந்ததாக இயக்குநர் கருணாநிதி குறிப்பிட்டார்.

இறுதியாக, தனக்குப் பிடித்த உணவு, நிறம், மொபைல் போன், உடை, ஊர், பாடகர், தியேட்டர், கார், கோவில் என அனைத்தையும் ராபிட் ஃபயர் ரவுண்டில் வாசன் ஜாலியாக பகிர்ந்துகொண்ட முழு நேர்காணலை இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X