எக்ஸ்க்ளூசிவ்: தொடர்ந்து பிரச்சனைகள்.. போராடிகிட்டே இருக்கேன்.. நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி!

சென்னை: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள காடன் திரைப்படம் வரும் மார்ச் 26ம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் காடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஷ்ணு விஷாலை மடக்கி எடுக்கப்பட்ட பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

கடந்த மூன்று வருடங்களாக தனது வாழ்க்கையே போராட்ட களமாகத் தான் உள்ளது என விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

நீ எல்லாம் நல்லாருப்பியா

நீ எல்லாம் நல்லாருப்பியா

காடன் படத்தின் டீசர் வெளியாகி மூன்று மொழிகளிலும் மிகப் பெரிய அதிர்வலையை கிளப்பி டிரெண்டாகி வருகிறது. விஷ்ணு விஷால் மீது மண்ணை வாரி தூற்றி நீ எல்லாம் நல்லாருப்பியான்னு ராணா டகுபதி கேட்கும் காட்சி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

யானையுடன் தான்

யானையுடன் தான்

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த மாதம் வெளியாகிறது. இந்த படத்தில் அதிகமாக யாருடன் உங்களுக்கு காம்பினேஷன் சீன் என கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல், யானையுடன் தான் என விஷ்ணு விஷால் கூறியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

3 ஆண்டுகளாக போராட்டம்

3 ஆண்டுகளாக போராட்டம்

மனைவியோடு விவாகரத்து, குடிப்பழக்கம், காயம் ஏற்பட்டது என துவண்டு போயிருந்த விஷ்ணு விஷால் மீண்டும் கம்பேக் கொடுக்கும் விதமாக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து மாறினார். ஆனால், மறுபடியும் மோசடி புகார் உள்ளிட்ட சர்ச்சைகள் அவரை தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது என்றும் கூறியுள்ளார்.

படங்கள் மூலமாக பதில்

படங்கள் மூலமாக பதில்

காடன் திரைப்படத்தில் நிச்சயம் வித்தியாசமான விஷ்ணு விஷாலை பார்ப்பீங்க, அந்த படம் தான் எனக்கு உடலை ஃபிட்டாக மாற்ற வேண்டும் என சொல்லிக் கொடுத்தது. யானை தும்பிக்கை வழியாக எல்லாம் குதித்து வந்து நடித்துள்ளேன். என்னுடைய ஹேட்டர்களுக்கு படங்கள் மூலமாக பதில் கொடுப்பேன் என பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

மாலத்தீவில் காதலியுடன்

மாலத்தீவில் காதலியுடன்

விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வரும் விஷ்ணு விஷால், சமீபத்தில் அவருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் வேற லெவலில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X