twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சண்டைக் காட்சிகள் இல்லாத படங்களிலும் இனி நடிப்பேன்!- அர்ஜுன்

    By Shankar
    |

    தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டவர். இடையில் லேசாக மார்க்கெட் டல்லடைந்தபோது சொந்தப் படத்தை தானே இயக்கி ஜெயித்தவர்.

    இவரது காலத்தில் அறிமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

    Interview with actor Arjun

    இவர் நடித்த ஒரு மெல்லிய கோடு நாளை வெளியாகும் சூழலில், அவருடன் ஒரு சந்திப்பு...

    இதுவரை 150 மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறீர்கள். அதில் உங்கள் நினைவில் இன்னமும் நிற்கும் பாத்திரம்?

    ஒரு படைப்பாளியின் படைப்புகள் அனைத்தும் எப்படி சிறந்ததோ.. அது மாதிரி ஒரு கலைஞனின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பானதுதான். நான் ஏற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவைதான்.

    குறிப்பாக சொல்லவேண்டுமானால்... முதல்வன் ( புகழேந்தி ), ஜென்டில்மேன் ( கிச்சா), ஜெய்ஹிந்த், பிரதாப்... இதுபோல் நிறைய படங்களைச் சொல்லலாம். இவை அனைத்துமே என்னை வேறு விதமாக அடையாளப்படுத்திய படங்கள்.

    Interview with actor Arjun

    இன்னும் நிறைய பேர் ஜெய்ஹிந்த், முதல்வன் மாதிரி படங்களில் மீண்டும் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். அதுமாதிரி எப்பவாவது ஒரு முறைதான் அத்திபூத்தார் போல் சில படங்கள் வரும். நாளை வெளியாக உள்ள ஒரு மெல்லிய கோடு படத்தின் கதாபாத்திரமும் என்னை வித்தியாசப்படுத்திக் காட்டும்.

    ஆக்டிங் கிங், ஆக்ஷன் கிங்... உங்களை எப்படி முன்னிறுத்திக் கொள்ளப் பிடிக்கும்?

    ஆக்டிங் ஹீரோ என்பது ஆக்ஷன் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ என்பது ஆக்டிங் ஹீரோவுக்குள் அடங்கும். சிவாஜி கணேசன் போன்றோர் நடிப்பில் தனித்துவம் காட்டி தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார்கள். நானும் ஒரு சில படங்களில் ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக தனித்துவம் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

    பல படங்களில் பார்த்துப் பழகிப் போன அதே காக்கி சட்டை கதாபாத்திரம்தானே ஒரு மெல்லிய கோடு படத்திலும்?

    நான் முதன் முதலாக காக்கிசட்டை போட்டது 1986 ல் சங்கர் குரு படத்திற்காகத்தான். அதற்கு பிறகு நிறைய படங்களில் காக்கிசட்டை போட்டு நடித்துள்ளேன். ஆனால் இந்த ஒரு மெல்லிய கோடு படத்திற்காக காக்கிசட்டை போடாத ஒரு காவலனாக நடித்திருக்கிறேன்.

    போலீஸ் ஆபீசர் என்றாலே நிச்சயமாக அடிதடி இருக்கும், ஆக்ஷன் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. இந்த படத்தில் படத்தின் திரைக்கதையே ஆக்ஷன் படம் மாதிரி ஒரு வேகத்துடன் இருக்கும். அதனால்தான் சண்டைக் காட்சிகளில் நடிக்க வில்லை.

    Interview with actor Arjun

    ஆக்ஷனுக்கு உண்டான வேடம் இருந்து எனக்கு மகுடம் சூட்டிய படங்கள் ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், பிரதாப், முதல்வன் போன்ற படங்கள். அதுபோல இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் இந்த படத்தில் என்னை கையாண்டவிதம் எனக்கு ஒரு மன நிறைவை கொடுத்திருக்கிறது. நிச்சயமாக இனி சண்டை காட்சிகள் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிற அபிப்பிராயத்தை உடைத்துவிடும் ஒரு மெல்லிய கோடு படம். இனி இது போல் வித்தியாசமான கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

    English summary
    A mini interview with action king Arjun, the hero of Oru Melliya Kodu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X