தலதளபதியோட ஆரம்பகால ஹீரோயின் ...யார்கிட்டையும் சொல்லாத விஷயங்களை பகிர்ந்த கீர்த்தனா

சென்னை : பழைய கருப்பு வெள்ளை படங்களில் ஹீரோவாக நடித்து, இன்றும் மூன்று தலைமுறை நடிகர்கள் வந்தபோதும் சிலர் ஹீரோவாக நடிப்பது உண்டு. அதில் முக்கியமானவர் ரஜினி காந்த். அது போல... இன்று எத்தனையோ ஹீரோக்கள் வந்தாலும் அஜித்-விஜய் க்கான மாஸ் குறையவே இல்லை.

Recommended Video

Vijay Silent type Ajith எல்லாரோடும் நல்லா பேசுவார் | Keerthana P-02 | Rewind Raja | Filmibeat Tamil

இன்றும் ஹீரோக்களாக அவர்கள் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்புகள் உள்ளன. அது போன்றே சில நடிகைகளுக்கும் அமையும். அதில் ஒரு அற்புதமான வாய்ப்பு நடிகை கீர்த்தனாவுக்கும் அமைந்தது.

விஜய்யுடன் நாளைய தீர்ப்பு, அஜித் உடன் பவித்ரா, மைனர் மாப்பிள்ளை, போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். பலமொழித்திரைப்படங்களிலும் நடித்தவர். இன்று சீரியல்களிலும் நடித்து வருகிறார். பவித்ரா படத்தில் செவ்வானம் பாடலில் வரும் அந்த சுட்டிப்பெண்ணை தமிழ் மக்களால் மறக்கவே முடியாது. நமது பிலிமிபீட் தளத்தோடு நடிகை கீர்த்தனா பகிர்ந்து கொண்ட அழகான விஷயங்கள் இதோ..

அப்பவே அப்படி

அப்பவே அப்படி

கேள்வி: " விஜய்- அஜித் இவர்களோட நடிச்ச அந்த காலகட்டம் எப்படி?"

பதில்: விஜய் கூட நாளைய தீர்ப்பு படத்துல பிரியா-ன்னு ஒரு கேரக்டர்ல நடிச்சேன்., அதுக்கப்பறம் சூரியன் சந்திரன், பதவிப்பிரமானம், அப்பறம் தெலுங்குல சுந்தரவதன சுப்புலக்ஷ்மி மொகுடா-ன்னு ஒரு தெலுங்கு படம், தாய்தங்கை பாசம், மண்ணை தொட்டு கும்பிடனும் இதெல்லாம் பண்ணிட்டு இருந்தப்போ 90'S ல அஜித் கூட நடிச்ச படம் தான் பவித்ரா. மறக்கவே முடியாத அனுபவங்கள், மக்கள் கிட்டயும் நல்ல வரவேற்பு இருந்துச்சு.

அந்த மாண்டேஜ் சாங்

அந்த மாண்டேஜ் சாங்

கேள்வி: "இன்னைக்கும் ரசிகர்கள் ரசிச்ச ஒரு சீன்-ல உங்களுக்கு பிடிச்ச சீன் எது"

பதில்: பவித்ரா படத்துல செவ்வானம் பாட்டுல, ஒரு மாண்டேஜ். அதுல நாய் குட்டி முன்னாலே அஜித் கெத்தா போஸ் கொடுப்பார் அந்த நாய் பார்த்து முறைக்கும். உடனே பயந்து அந்த நாய் குட்டிய என் கிட்ட விட்டுட்டு அவர் ஓடிருவாரு. நான் பயந்துடுவேன். அந்த ரியாக்ஷன் ரொம்பவே க்யூட்டா இருக்கும்-ன்னு இன்னமும் நிறையபேர் சொல்லிட்டே இருக்காங்க. மைனர் மாப்பிள்ளை படத்தில தந்தி கொடு தந்தி கொடு பாட்டும் எல்லாருக்கும் இன்னமும் பிடிச்ச பாட்டு. அப்போ ரொம்ப ப்ரண்ட்லியா கேஷ்வலா இருந்தாரு. இப்பவும் அப்படித்தான் இருப்பாரு. அவர நேர்ல பாக்கற சூழல் அமையல. அதானால சந்திக்கல. நிறையபேர் சொல்லி கேட்டுருக்கேன். நிறையபேருக்கு ஹெல்ப் பண்ண கூடியவர், கேஷ்வலா இருப்பாரு-ன்னு. அது அவரோட குணம். மாறுறதுக்கு வாய்ப்பே இல்ல.

சிவாஜி-க்கு பேத்தியா?

சிவாஜி-க்கு பேத்தியா?

கேள்வி: " சீனியர் ஆர்டிஸ்ட் கூட நடிச்ச அனுபவம் பற்றி"

பதில்: ஸ்ரீவித்யா மேடம் எனக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க, பூப்பறிக்க வருகிறோம் படத்துல சிவாஜி சார் கூட நடிச்சிருக்கேன். அவங்க கூடல்லாம் நடிச்சதே பெரிய விஷயம். சிவாஜி சாரோட பேத்தியா நடிச்சிருக்கேன். ஒரே டேக் ல ஓக்கே வாங்கிருக்கேன். சீனியர் ஆர்டிஸ்டோட டைமிங், பஞ்ச்வாலிட்டி, மேக்கப், டயலாக் டெலிவரி இதெல்லாம் நிறையவே அவங்க கிட்ட கத்துகிட்டேன். எனக்கும் சில விஷயங்கள் சொல்லி குடுத்துருக்காங்க. என் முகத்த பார்த்த உடனே, சாஃப்ட்டா சாந்த ஸ்வரூபினியான கேரக்டரா தான் குடுத்தாங்க. ஓக்கே. இருந்தாலும் இப்ப உள்ள ஆக்டிங்-அ வெளிப்படுத்த நெகடிவ் ரோல் கிடைச்சா நல்லாருக்கும். திருமதி ஹிட்லர்ன்னு ஒரு சீரியல் நடிக்கிறேன். அதுல நெகடிவ் ரோல்தான் நடிச்சிட்டு இருக்கேன். ஷூட் க்கு போயி, அந்த கேரக்டரா மாறுறதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆகிடும். டைரக்டர், இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும். இன்னும் கொஞ்சம் கோவம் வேணும்'ன்னு கேட்டு கேட்டு.. சத்தமா பேசி பேசி, அந்த நாள் முழுக்க சத்தமா பேசினதனால தொண்டையே போன அனுபவங்கள் ல்லாம் உண்டு.

மற்ற மொழிகளில்..

மற்ற மொழிகளில்..

கேள்வி: "தமிழ் தவிர, வேறென்ன மொழி படங்கள் ல்லாம் நடிச்சிருக்கீங்க"

பதில்: மலையாளத்தில திலிப் கூட அறிமுகமான ' சாமூக்ய பாடம். கல்லு கொண்ட ஒரு பெண்' இந்த படங்கள் ல நடிச்சேன். 96 அந்த டைம்ல , அஞ்சர கல்யாணம்-ன்னு ஒரு மலையாள படம் பண்ணிருக்கேன். தெலுங்குலயும், சீத்தாக்கா, அலரிபெலிகொடுக்கு,கணேஷ்,-ன்னு நிறைய படங்கள் நடிச்சிருக்கேன், கன்னட படங்களும் பண்ணிருக்கேன்.

அண்ணன் தங்கை பாசம்

அண்ணன் தங்கை பாசம்

கேள்வி: "தெலுங்குல வெங்கடேஷ் கூட நடிச்ச அனுபவம் பற்றி.. "

பதில்: கணேஷ்-ன்னு தெலுங்கு படம். அதுல வெங்கடேஷ்க்கு தங்கச்சியா நடிச்சிருந்தேன். அவர் செட்டுக்கு வந்தார்ன்னா.. ஒரு ரியல் அண்ணன போல ஒரு ஃபீல் ஆகிடும். பேமலில ஒருத்தர் மாதிரி இருக்கும். அந்த படத்துல நான் நடிக்கல.. வாழ்ந்துருக்கேன்னு தான் சொல்லனும். அந்த படத்துக்கு 7 விருதுகள் கிடைச்சிருக்கு.

மறக்க முடியாத அவார்ட்

மறக்க முடியாத அவார்ட்

கேள்வி: உங்களுக்கு கிடைச்ச விருதுகள் ல, உங்களுக்கு மிகவும் மறக்க முடியாத விருது எது?

பதில் : எத்தனையோ விருதுகள் வாங்கிருக்கேன். சட்டுன்னு நியாபகத்து வரல. பல அவார்ட்ஸ் வாங்கிருக்கேன். முக்கியமா கலைஞர் கையால வாங்கின விருது ரொம்பவே சந்தோஷம். அது மறக்கவே முடியாது. அதே நேரத்துல செட் ல நடிச்சிட்டு இருக்கும் போது, ஒரு ஷாட் முடிஞ்சதும் உடனே அதுக்கு எல்லாரும் கை தட்டுறதே மிகப்பெரிய அவார்ட். நிச்சயமா அங்கயே நல்லா தெரிஞ்சிடும், இந்த சீன் ஹிட், நாம நல்லா பண்ணிருக்கோம்ன்னு. அத நான் மிகப்பெரிய விருதா நினைக்கிறேன். என்று கூறிய கீர்த்தனாவிடம், "நிச்சயமா இன்னும் பல விருதுகள் உங்களுக்கு கிடைக்கும். அஜித்-விஜய் கூட நீங்க மறுபடியும் நடிக்க வாழ்த்துக்கள். இன்னும் பல கேரக்டர்கள், உங்களுக்கு பிடிச்ச மாதிரியான, உங்க திறமை வெளிப்படுறமாதிரியான கேரக்டர் கிடைக்க ஒன் இந்தியா,ப்லிம் பீட் சார்பாக வாழ்த்துக்கள்' என வாழ்த்தி விடைபெற்றோம். அன்று பார்த்த பவித்ரா பட சித்ராவுக்கும் இன்றைய கீர்த்தனாவுக்கும் எவ்வளவு மாற்றங்கள் என, முழுமையான அவரின் கலகலப்பான இந்த வீடியோக்களை மூன்று பாகங்களாக பில்மிபீட் யூட்யூபில் காணலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X