தல நிறைய பேசுவார்.. தளபதி கம்மியா பேசுவார்.. காமெடியன் சுவாமிநாதன் பேட்டி !

சென்னை : தல நிறைய பேசுவார், தளபதி கம்மியாக பேசுவார் என்று காமெடி நடிகர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நடிகர் சுவாமிநாதனை விட லொல்லு சபா சுவாமிநாதன் என்றால் பலருக்கு தெரியும். அந்த அளவுக்கு லொள்ளு சபாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவின் முக்கிய காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவை தாண்டி கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சுவாமிநாதன் அதிகமாக சந்தானம் படங்களில் நடித்தவர். சந்தானத்துடன் இவர் நடித்த அனைத்து காமெடி காட்சிகளும் வசனங்களும் பெரிய ஹிட்டாகின.

 Interview with comedian Swaminathan

சுவாமிநாதன் தமிழ் சினிமாவின் முக்கிய துருவங்களான அஜித் மற்றும் விஜய் என இருவருடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் .

நடிகர் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்ததை பற்றி கூறிய அவர், அஜித் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் நேரத்தில் அவர் மிக எதார்த்தமாக நெருங்கி பழகுவார் முக்கியமாக அவர் கார் பந்தயங்களில் பங்கேற்ற போது எடுத்திருந்த புகைப்படங்களை எல்லாம் என்னுடன் பகிர்ந்து இருந்தார். மேலும் அஜித் என்ன சாப்பிட்டாலும் எனக்கும் கொடுக்க சொல்லுவார் என்று கூறினார் .

 Interview with comedian Swaminathan

அஜித் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவலை கூறிய சுவாமிநாதன், அஜித் மக்களுக்கு பிடிக்கும் வரை தான் நடிப்பேன் அவர்கள் போக சொன்னால் போய்விடுவேன் என கூறினாராம். இப்படி இயல்பான நடிகரை நான் பார்த்ததே இல்லை என சுவாமிநாதன் பகிர்ந்து இருந்தார் .

மேலும் தளபதியை பற்றி கூறும் போது அவருடன் வேலாயுதம் படத்தில் நடித்த போது நடந்த தகவல்களை பகிர்ந்து இருந்தார். மேலும் நடிகர் விஜய் படப்பிடிப்பின் போது என்னுடன் அந்தாக்சரி எல்லாம் விளையாடியிருக்கிறார். இருந்தாலும், விஜய் அதிகமாக பேசமாட்டார். ஆனால் நன்கு பாராட்டுவார் என்று கூறியிருந்தார் .

 Interview with comedian Swaminathan

சுவாமிநாதன் மக்களிடம் அதிகம் போய் சேர்ந்தது பல காமெடிகளில் சந்தானத்துடன் நடித்தபோது தான். முக்கியமாக பாஸ் என்கிற பாஸ்கரன் படம் லொள்ளு சபாவில் கிடைத்த பெயரை விட அந்த ஒரு படத்தில் கிடைத்த பெயர் தான் மிகவும் அதிகம் என கூறியிருந்தார் .

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சுவாமிநாதனின் என்றென்றும் புன்னகை படத்தின் காமெடி வசனத்தை பலரும் டப்ஸ்மேஷாக பேசி அது மிகவும் டிரெண்டானது. இதற்கு நன்றி தெரிவித்து கொண்டார் சுவாமிநாதன். மேலும் மக்கள் தான் இந்த இடத்தை கொடுத்தார்கள் அவர்களுக்கு கட்டாயம் கடமை பட்டிருக்கிறேன் என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X