கேலி.. கிண்டல்.. என் விடாமுயற்சியால் வென்றேன்.. தர்மதுரை ஜீவா !

சென்னை : பல கேலி கிண்டல் பேச்சுக்களை கடந்து, உண்மையாக உழைத்தேன் இன்று படவாய்ப்புகள் வருவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தர்மதுரை ஜீவா ஒரு பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

நடிகை ஜீவாவை நாம் தர்மதுரை படத்தில் முக்கிய வேடத்தில் பார்த்து இருப்போம். திருநங்கையாக இருந்து விடாமுயற்சியின் காரணமாய் தற்போது சினிமாவில் சாதித்து இருக்கிறார் ஜீவா. கடைசியாக ஜீவா சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்து இருந்தார். அதனையடுத்து பல பேட்டிகளில் முக்கிய தகவல்களையும் தான் கடந்து வந்த பாதை பற்றியும் பகிர்ந்து இருக்கிறார் .

 Interview with Dharmadurai Jeeva

நான் ஆரம்ப காலத்தில் சென்னை வந்து வேலை கிடைக்காததால் கஷ்டப்பட்டு பல வேலைகளை செய்து இருக்கிறேன். என் 14வயதிலே சினிமா ஆசை வந்து விட்டது அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் சினிமாவில் டச் அப் பாய் வேலை கிடைத்தது அதை பயன்படுத்தி பல ஆண்டுகள் சினிமாவில் டச்அப் பாயாக இருந்தேன்.

அதன் பின் முழுவதுமாக பெண்ணாக மாறிய பின்பும் பல படங்களில் பணியாற்றினேன் அப்போது தான் தர்மதுரை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தர்மதுரை படத்தில் சீனு ராமசாமி வாய்ப்பு கொடுத்து பல அறிவுரைகளை தினமும் வழங்குவார். நீ நல்லா வரணும் என்று இயக்குனர் சீனு ராமசாமி எப்போதும் கூறுவார்

 Interview with Dharmadurai Jeeva

மேலும் நான் பல சினிமா கம்பெனிகளில் வாய்ப்புகாக ஏறி இறங்கினேன். அப்போது கூட 'நீ என்ன அடிக்கடி வர உன்ன எப்படி நடிக்க வைக்கிறது. நயன்தாரா தங்கச்சியா நடிக்கிறியா இல்ல அக்காவா நடிக்கிறியா என்று பல கிண்டல் பேச்சுகள் எல்லாம் வந்துச்சு என்று மிக வருத்ததுடன் கூறினார் ஜீவா. அதன் பின் கடுமையாக உழைத்தேன் உண்மையிலே நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐரா படத்தில் நயன்தாரா தோழியாக நடித்தது மிகவும் சந்தோஷம் அளித்தது என்று கூறினார் .

 Interview with Dharmadurai Jeeva

நான் விஜயின் தீவிர ரசிகை பைரவா படத்தில் ஒரு நடிகைக்கு டச்அப் வேலை செய்யும் போது விஜயை பார்க்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறிய ஜீவா, அப்போது விஜய் நேற்று தான் தர்மதுரை படம் பார்த்தேன் மிகவும் நன்றாக நடித்து இருந்தாய் என்று கூறினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டேன் என்று கூறினார் .

 Interview with Dharmadurai Jeeva

ஜீவா தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வரும் படத்தில் ஒரு முழு நீள முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது தான் அவருக்கு முதல் முழு நீள கதாபாத்திரம் ஆகும். இந்த படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதற்கு பிறகு புஷ்கர் காயத்ரி தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடித்து வருவதாக ஜீவா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X