twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெல்சன் வெங்கடேசனின் ஒரு நாள் கூத்து!

    By Soundharya
    |

    நெல்சன் வெங்கடேசன் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது.

    இப்படம் குறித்தும், தனது அனுபவம் குறித்தும் இயக்குநர் வெங்கடேசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

    அந்த சந்திப்பிலிருந்து...

    Interview with Director Nelson Venkatesh

    ரேடியோல இருந்து எப்படி சார் சினிமாக்குள்ள வந்தீங்க, அதுவும், இயக்குனரா?

    எனக்கு ரேடியோல வேலை பாக்குறது ரொம்ப பிடிக்கும். 2003-ல நான் படிக்க ஆரம்பிக்கும் போதே ஆல் இந்தியா ரேடியோ, அதுக்கு அப்புறம் பிக் ஃஎப் எம், சூரியன் ஃஎப் எம் ல வேலை பார்த்தேன், அதுக்கு அப்புறம் நான், தீனா, தினேஷ் மூணு பெரும் சேர்ந்து ஒரு அக்கடமி ஆரம்பிச்சோம். நாங்க start பண்ணி ஒரு 5, 6 வருஷம் ஆய்ருச்சு. ரேடியோ எனக்கு ஒரு satisfying career எனக்கு. ஆனா, சினிமா அதுக்கும் முன்னாடி ஆரம்பிச்சது. ஏன்னா, நான் பிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சேன். அப்புறம் ஒரு வருஷத்துலயே நான் விலகிட்டேன். அப்புறம், cinematography ஒரு வருஷம் தான் படிச்சேன். அப்பவும் என்னோட லட்சியம் படம் இயக்குறதுல தான் இருந்துச்சு. அதனால மறுபடியும் விலகிட்டேன். அப்புறம் ரேடியோ-ல வேலை பார்க்க ஆரம்பிச்சேன். அப்டியே என்ன நான் தயார் பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் பல வருஷம் கழிச்சு 2014-2015 வருஷத்துல எனக்கு படம் இயக்குறதுல வாய்ப்பு கிடைச்சது.

    உதவி இயக்குனராக வேலை பார்த்த அனுபவம் ஏதாவது இருக்கா சார்?

    நான் இதுவரை யாருகிட்டயும் அப்படி வொர்க் பண்ணல. எனக்கு அந்த வாய்ப்பும் சூழலும் கிடைக்கல. அதுதான் ஒரே காரணம். வொர்க் பண்ண கூடாதுன்னு இல்ல, வாய்ப்பும் சூழலும் அமையல. என்னோட நண்பர் பாஸ்கர் ஒருத்தர் கேமரா மேனா இருக்காரு, (10 என்றதுக்குள்ள படத்தோட கேமரா மேன்) அவரு என்னோட கிளாஸ்மேட். அதனால, எனக்கு உறுதி கொடுத்தாரு. உதவி இயக்குனரா வொர்க் பண்ணனும்னு அவசியம் இல்ல, பண்ணிக்கலாம்ன்னு.. நான் யாருன்னு அவருக்கு தெரியும், என்மேலையும், என் திறமை மேலையும் இருந்த நம்பிக்கை, செல்வராகவன் கூட நிறைய தடவ சொல்லிருக்காரு, இந்த பீல்ட்ல படிச்சவங்க அவ்வளவா இல்ல. இருந்தா நல்லா இருக்கும்னு. டைரக்டர் ஹரி சார் கூட சொல்லிருக்காரு, சினிமால அந்த Draft-அ கத்துக்கிறது பெரிய விஷயம் கிடையாது, எல்லாரும் கத்துக்கலாம். கத்துக்க முடியாத விஷயம் என்னன்னா அங்க இருக்குற Creative Reference தான். அது ஒரு உதவி இயக்குநரா வொர்க் பண்ணிட்டா வந்துராது. அப்படின்னு சொல்லிருக்காரு.

    Interview with Director Nelson Venkatesh

    பார்த்த படங்கள், படித்த இலக்கியங்கள்

    இன்னும் சில டைரக்டர் எல்லாம் எனக்கு யூஸ் ஆகுற மாதிரி சில பாயிண்ட்ஸ் சொல்லிருக்காங்க. அத நான் சீரியஸா எடுத்துக்கிட்டேன். அந்த craft-அ பத்தி படிச்சு, தெரிஞ்சுக்கிட்டு அதுல இருக்குற Creative Reference அ தெரிஞ்சுக்கிட்டு முடிஞ்ச அளவுக்கு என்ன நான் தயார் படுத்திக்கிட்டேன். நான் சினிமாவுக்காக தயார் ஆனேன். அதுக்காக நான் படிச்சா இலக்கியங்கள், பார்த்த திரைப்படங்கள், நான் ரசிச்ச விஷயங்கள், தயார் படுத்திக்கிட்ட வழிமுறை தான். அதனால், உதவி இயக்குனரா வொர்க் பண்ணக்கூடிய வாய்ப்பு அமையல, அவ்ளோதான்.

    கம்மியான டைமில் எழுதிய ஸ்கிரிப்ட்

    ரேடியோல இருந்து நேரடியாக இயக்குனரா களம் இறங்கும் போது பல பிரச்சனைகள் இருக்கு, நடிப்பு நாம எதிர் பார்குற மாதிரி இருக்கணும், எல்லாரையும் ஒருங்கினைக்கணும்ன்னு ஏகப்பட்ட விஷயங்களை எப்படி சமாளிச்சீங்க..?
    நிச்சயமா.. எங்களுக்கு ஸ்க்ரிப்டிங் ரொம்ப முக்கியமா இருந்துச்சு. நானும் என்னோட எழுத்தரும் சேர்ந்து தான் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கோம். அதனால் ஸ்க்ரிப்டிங்-க்கு நாங்க ஒரு பத்து வருஷமாவே எழுதிட்டு இருக்கோம், ஒவ்வொரு தடவையும் நாங்க ஆரம்பிக்க முயற்சி பண்ணிருக்கோம். அதுல, ஒரு நாள் கூத்து தான் ரொம்ப கம்மியான டைம்ல எழுதுன ஸ்கிரிப்ட். அதனால் ஸ்க்ரிப்டிங்-ல எங்களுக்கான டைம் எடுத்துக்கிட்டோம். அதே நேரத்துல எங்களுக்கு என்ன வேணும்னு ரொம்ப தெளிவா நாங்க ஸ்கிரிப்ட்-ல வடிவமைச்சோம். படப்பிடிப்பு முழுதும் எங்களை வழிநடத்தியது எங்களோட ஸ்கிரிப்ட் தான். அதையும் தாண்டி, ஒரு டைரக்டரா ஒரு சீன் எழுதும் போது, நம்மளோட visual sense இருக்குல, அந்த ஆர்டிஸ்ட் எப்படி நிக்கணும், எப்படி பேசணும்னு, நா ஸ்கிரிப்ட் எழுதும் போதே எங்களுக்கு தீர்மானமா தெரிஞ்சது. அதுக்கப்புறம், அந்த கதாப்பாத்திரங்கள் எல்லாமே எனக்கு பிடிச்ச கதாப்பாத்திரங்கள். அவங்க என்ன செய்யணும் அப்படின்ற ஒரு அளவீடு எனக்கு தெரிஞ்சது. அதுனால, அத கையாளுறது எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்ல.

    Interview with Director Nelson Venkatesh

    நடிப்பை வாங்குறது ஈஸி

    படத்தோட முதல் நாள்ல இருந்து கடைசி வர அவங்ககிட்ட நடிப்ப வாங்குறது ரொம்ப ஈசியா இருந்தது. அவங்க எல்லாரும் அற்புதமான நடிகர்கள். நான் திரையில தேடக்கூடிய கதாப்பாத்திரம் என்னனு எனக்கு தெரிஞ்சது. இங்க லக்ஷ்மின்னு ஒரு கதாப்பாத்திரம் இருக்கு, சுசீலான்னு ஒரு கதாப்பாத்திரம் இருக்கு, அவங்க என்ன பண்ணுவாங்க, எப்படி இருப்பாங்கனு எனக்கு நல்ல பரீட்சியமா தெரிஞ்சது. நான் அவங்க கிட்ட நடிப்ப கேட்டு வாங்குறதுல கஷ்டப்படல, நடிப்ப பொருத்தவரைக்கும் ந அவங்களுக்கு சிரமம் குடுத்திருக்கேன். எல்லாரும் நெறைய பேட்டில சொல்லிருக்காங்க, நெறைய அடிக்கடி ஒன் மோர் கேப்பாருன்னு.. அதுல எனக்கு என்ன வேணும்னு ஒரு அளவுக்கு தெரிஞ்சிருந்தது. எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க..

    ரேடிய ஸ்டேஷன் அனுபவம்

    படத்தோட ட்ரைலர்-ல ரேடியோ ஸ்டேஷன்ல கதை நடக்குதே.. அப்போ உங்க அனுபவம் எதாவது உள்ளடங்கிருக்கா..? ரேடியோ ஸ்டேஷன்-ல மட்டுமே நடக்குற கதை கிடையாது. அங்கயும் நடக்குற கதை. இங்க நிறைய கதை திண்டுக்கல், சென்னை, திருச்சி, ஒரு ஐடி ஆப்பிஸ்ல நடக்குது. அதையும் தாண்டி, நான் கடந்து வந்த பாதைகள், சின்ன சின்ன சுவாரிஸ்யங்கள், நான் பார்த்தது.. இப்படி எல்லாமே சேர்த்து வடிவமைச்சிருக்கேன். ஒரு Creator-அ நம்மள சுத்தி நடக்குற விஷயங்கள் தான் நமக்கு Inspiration, நம்மள சுத்து இருக்கும் கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள்.. நானும் அப்படிதான் பண்ணிருக்கேன். இது உண்மை கதை கிடையாது. ஆனா, உண்மையான சுவாரிஸ்யங்கள் நிறைந்த கதைன்னு சொல்லலாம்.

    கல்யாணம்

    படத்தோட ட்ரைலர்ல கல்யாணம் பத்திய கேள்வி வசனங்கள் நிறைய இருந்துச்சே, அப்போ உங்களுக்கும் அதே மாதிரி கேள்விகள் இருக்கா? ஊரு பக்கம் ஒரு ரெண்டு பேரு சந்திச்சு பேசுனாவே, அடுத்த 10-வது செகண்ட் கல்யாணத்த நோக்கி பேச்சு போயிரும். கல்யாணம் பண்ணவங்கனா, கல்யாண வாழ்க்கை எப்படி போகுது..? இல்ல, கல்யாணம் பண்ணாதவங்கனா எப்போ கல்யாணம் அப்படின்னு கேட்டுருவாங்க.. நம்ம நாடு Abused with marriage அப்டின்னு இருக்குறது எனக்கு ரொம்ப disturbing-அ இருந்துச்சு. என்னோட பிரெண்ட்ஸ், சுத்தி நடக்குற விஷயங்கள பார்க்கும் போது, நம்ம வாழ்க்கையே கல்யாணத்த நோக்கி தான் கட்டமைக்கப்பட்டிருக்கா? பொண்ணுங்கனா, படிச்சுட்டு கல்யாணம் பண்ணி கொடுப்போம், படிச்சுட்டு கல்யாணம் பண்ணி கொடுப்போம்ன்னு பல சினிமால கூட பாத்திருக்கோம். அது தான் நான் கேள்வியா கேட்டுருக்கேன், கல்யாணம் நம்ம வாழ்க்கையோட பகுதியா? இல்ல கல்யாணம் தான் நம்ம வாழ்க்கையோட லட்சியமா? அதே மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் வாழ்க்கையில முழுமை கிடைக்குமா? இல்ல, கல்யணம் பண்ணாதவங்கலாம் வாழ்க்கைய தொலைச்சவங்களா..? இப்படி பல கேள்விகள் கல்யாணத்த பற்றி.. இந்த கேள்வியை தான் படமா பண்ணிருக்கோம். இங்க தீர்வோ பதிலோ இல்ல. இத பிரசார ரீதியா சொல்லல, ஒரு கதையா சொல்ல முயற்சி பண்ணிருக்கோம்.

    Interview with Director Nelson Venkatesh

    லவ் மேரேஜ்

    உங்க கல்யாணம் எப்படி சார் ? லவ்.. இல்லை அரேஞ்டா?
    என்னோடது லவ் மேரேஜ் தாங்க.. கல்யாணத்துக்கு முன்னாடியும் அப்புறமும் ரொம்பவே நல்லா இருக்கு. எனக்கு சரியான பார்ட்னர் கிடைச்சிருக்காங்க.
    உங்க மனைவி உங்களுக்கு தொழில் ரீதியாக என்னெல்லாம் உதவி பண்ணுவாங்க..?
    என்னோட மனைவி எப்போவுமே என்ன சப்போர்ட் பண்ணிட்டே இருப்பாங்க.. அவங்களும் ஒரு நல்ல Creator. இந்த படத்துல அவங்களோட ஈடுபாடு நிறையவே இருக்கு. மியா ஜார்ஜ்-க்கு அவங்க தான் டப்பிங் பண்ணிருக்காங்க. நிறைய படங்களுக்கும் டப்பிங் பண்ணிருக்காங்க. இன்னைக்கு என்னோட வொர்க் nature, புரிதல் அவங்களுக்கு நல்லாவே இருக்கு. நிறைய யோசனைகளெல்லாம் கொடுத்திருக்காங்க.

    நடிகர்கள்

    படத்தோட நடிகர்களை பத்தி சொல்லுங்க..?
    நடிகர்களை பொறுத்தவர நான் லக்கினு சொல்லலாம். நான் பர்பார்மென்ஸ் ரொம்ப எதிர்பார்த்தேன் ஆர்டிஸ்ட் கிட்ட இருந்து, ஒரு குறிப்பிட்ட கேரக்டர் இவங்கதான் பண்ணனும்னு விருப்பப்பட்ட மாதிரி எல்லாருமே கிடைச்சிருக்காங்க. தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா, ரித்விகா, பாலா சரவணன், ரமேஷ் திலக், கருணாகரன் எல்லாருமே அவங்க அவங்க காதபாத்திரத்திற்கு ஏற்ப கட்சிதமா பொருந்திருக்காங்க. இவ்ளோ பெரிய நிறைய நடிகர்களை handle பண்ண கொஞ்சம் கஷ்டமா இருந்தது. முதல் படம்ன்னால.. ஆனால் என்ஜாய் பண்ணேன். எல்லாருமே ரொம்ப உதவியாக இருந்தாங்க. அவங்க நடிக்கிறத ஸ்க்ரீன்-ல பார்க்கும் போது ரொம்ப பிரமிப்பா இருந்தது. நான் எழுதுனத அவங்க நடிக்கும் போதும், பேசும் போதும், அவங்க உடல் அசைவும் ரொம்ப நல்ல இருந்தது. நான் எழுதிய கதாப்பாதிரங்களுக்கு உயிர் கொடுத்தது நடிகர்கள் தான். எல்லாருமே குறை வைக்காம பண்ணிருக்காங்க.

    மியா ஜார்ஜ்

    மியா ஜார்ஜ்-ஐ எப்படி இம்ப்ரஸ் பண்ணி ஓகே சொல்ல வச்சீங்க..?

    Interview with Director Nelson Venkatesh

    மியா தமிழ்ல நிறைய படம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு கதாப்பாத்திரம் பிடிச்சிருந்தா மட்டும் தான் அவங்க ஒத்துக்குவாங்க. எங்க கதைய கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சிருந்தது. அப்புறம் கொஞ்ச நாளுக்கு பிறகு தான் commit பண்ணாங்க. அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தது, அவங்களுக்கு சொந்த ஊரு கேரளா. இருந்தாலும் தமிழ் ஓரளவுக்கு நல்லாவே பேசுவாங்க, எழுதுவாங்க. ஸ்கிரிப்ட்-ஐ நான் முன்னாடியே குடுத்திட்டேன். நல்ல மனப்பாடம் பண்ணிட்டாங்க. நான் சீன் நம்பர் மட்டும் சொன்ன போதும். அந்த சீன்ல என்ன நடக்கும் என்ன வசனங்கள் எல்லாமே அவங்களாவே பண்ணிருவாங்க. அந்த அளவுக்கு ஒரு supportive ஆர்டிஸ்ட்.

    Interview with Director Nelson Venkatesh

    பிடிச்ச ஆர் ஜே ?

    பிடிச்ச ஆர் ஜே ?
    எனக்கு எப்போவுமே பிடிச்ச ஆர் ஜே தீனா. இப்போ இருக்குறவங்க.. சுரேஷ் ஹலோ ஃஎப் எம் ல இருக்காரு.
    எப்படியாவது இவங்க கூட சேர்ந்து வேலை பாக்கனும்னு நினைக்குறவங்க..?
    நான் படம் எடுக்க ஆரம்பிச்சதால இதுக்கு மேல யாருகிட்டயும் அச்சிட்டன்ட்டா வேல பார்க்க முடியாது. அச்சிட்டன்ட்டா வேலை பார்க்கணும்னா, அனுராக் கஷ்யப் சார், வெற்றிமாறன் சார் கூட வேலை பார்க்கணும்னு ஆசைபடுறேன். நடிகர்கள் எல்லார் கூடையும் வேலை பார்க்கணும்.
    நேஷனல் அவார்ட் சாபு ஜோசப் கூட வேலை பார்த்த அனுபவம் ?
    சாபு-வை என் நண்பர் பாஸ்கர் தான் அறிமுகப்படுத்தி வச்சாரு. வல்லினத்திற்கு அவார்ட் வாங்குறதுக்கு முன்னாடியே நாங்க அறிமுகமாகிட்டோம். சாபு கூட நான் ரொம்ப வசதியா பீல் பண்ணேன். அவரு ரொம்ப அனுபவம் எடிட்டிங்-ல. அவரோட அனுபவம் எனக்கு ரொம்ப valuable-அ இருந்துச்சு. இது முழுக்க முழுக்க எடிட்டிங்க நம்புன படம். நன்றி சாபு...

    குறும்பட அனுபவம்

    குறும்பட அனுபவம் எதாவது இருக்கா ?
    2005-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்துல Gateway அவார்ட் அப்படின்னு ஒரு குறும்படம் போட்டி நடத்துனாங்க. அந்த போட்டில ஜெயிக்கிறவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசுன்னு சொல்லிருந்தாங்க. நான் லயோலா காலேஜ்ல படிச்சுட்டு இருந்தேன், அப்போ எனக்கு ஒரு 10,000 தேவைப்பட்டது. அதுனால நானும் அந்த போட்டில கலந்துக்கிட்டேன். ஒரு சின்ன ஊனமுற்ற பையன வச்சு மெரினா பீச்ச சுத்தி சுத்தி ஒரு குறும்படம் எடுத்தேன். எனக்கு அந்த process ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு கதையே காட்சியை உருவாக்கும் விதம். அதற்கு அப்புறம் அத எடிட் பண்ணி, பிஜிஎம் சேர்த்து, கதையை சொல்லும் பொழுது நான் தானாகவே சினிமாவால் ஈர்க்கப்பட்டேன் என்று சொல்லலாம். அந்த ஆரம்பித்தது தான் என்னுடைய சினிமா கனவிற்கான விதை. அது தான் நான் எடுத்த ஒரே குறும்படம் மெரினா. அதுக்கப்புறம் எனக்கு குறும்படம் இயக்கவேண்டிய அவசியம் எற்படல. குறும்படம் என்னோட கண்ணோட்டத்துல வேற மாதிரி இருந்துச்சு. திரைப்படம் எடுப்பதை விட, குறும்படம் எடுப்பது ரொம்ப கஷ்டம். ஒரு கதைய 2 மணி நேரத்துல்ல சொல்லிரலாம். ஆனா, ஒரு கதைய 7 நிமிஷத்துக்குள்ள சொல்லறதுக்கு கரு கிடைக்கணும். ரொம்ப வீரியமானதும் கூட. ஒரு வேலை எனக்கு படம் எடுக்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலைனா ஒரு வேலை குறும்படம் எடுத்திருக்கலாம். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

    என்ன எதிர்பார்க்கலாம்..?

    ஒரு நாள் கூத்து படத்துல ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம்..?

    கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு. எல்லாமே நல்லா இருக்கும். இந்த கதைய பார்க்கும் போது, அங்க பார்க்ககூடிய கதாப்பாத்திரங்கள் எல்லாமே எல்லாரும் கடந்து வந்த பாதையை உணர முடியும். அது தான் இந்த படத்தோட பெரிய பிளஸ். இந்த கதைய பார்க்கும் போது எல்லாமே நம்மல சுத்தி நடக்குற மாதிரியே தான் இருக்கும்.

    திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நெல்சன் சார்...!

    English summary
    Recently releasing Tamil movie Oru Naal Kothhthu Director Nelson Venkatesh's Interview to Oneindia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X