ஃபிரீயா பொய் ஜாவா சுந்தரேசனோட பேசிட்டு வாங்க பாஸ் !!!
சென்னை : தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமா கலைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களைப் பல்வேறுவிதமாக நடத்தி வருகிறது. தமிழ் சினிமா நூற்றாண்டு தொடர் கலந்துரையாடல், பயிற்சிப்பட்டறைகள், திரையிடல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுடன் சேர்ந்து நிகழ்கால தமிழ் சினிமாவை மையப்படுத்தியும், தொடர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நகைச்சுவை நடிகர் சாம்ஸுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

அறை எண் 305-ல் கடவுள் திரைப்படத்தில் ஜாவா சுந்தரேசனாகப் பலராலும் அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் "ஜாவா சுந்தரேசன்" "நகை கடைக்காரர் மகன்" என செல்லமாக அழைக்கப்படும் திரு சாம்ஸ் விஸ்வநாதனுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. "காதல் மன்னன்" படத்தின் மூலம் அறிமுகமாகி "சச்சின்" "மனம் கொத்தி பறவை" "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்" "பயணம்" என தனது கலைப் பயணத்தில் வெற்றிகரமாக பயணித்து சமீபத்தில் வெளியான "திட்டம் போட்டு திருடுற கூட்டம்" வரை நூறு படங்களை கடந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகருக்கான இடம்? தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் பங்கு? தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது? நகைச்சுவை கலைஞர்களுக்கு உரிய இடம் தமிழ் சினிமா கொடுத்திருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளுடன் நண்பர்கள் திரளாக கலந்துகொண்டு நடிகர் சாம்ஸுடன் கலந்துரையாடலாம்.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் நடைபெறவிருக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். அனுமதி இலவசம். மேலும் தகவல்கள் பெற அணுக வேண்டிய
தொலைபேசி எண்: 9840644916 .


Click it and Unblock the Notifications











