twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாயக்குரலின் சொந்தக்காரர்.. சித் ஸ்ரீராமுடன் ஒரு அழகிய சந்திப்பு !

    |

    தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடிய பல பெண்களின் கனவு நாயகன் சித் ஸ்ரீராம். இவர் குரலுக்கு மயங்காதவர்களே கிடையாது என்று தான் கூறவேண்டும். இவரது பாடல்கள் கேட்டால் சிலருக்கு ஆனந்தம் பலருக்கு பேரானந்தம். இப்படி பட்ட பாடகர் சித் ஸ்ரீராம் நம் பிலிமிபீட் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

    எப்படி பல மொழிகளில் ஹிட் பாடல்களை கொடுக்க முடிகிறது

    Interview with playback singer Sid Sriram

    இதற்கு முதலில் இசை அமைப்பாளர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும் மற்றும் அவர்கள் தான் முத்து போன்ற பல பாடல்களை எனக்காக எடுத்து வருகின்றனர். மற்றும் பாடலாசிரியர்கள் எனக்கு தமிழ் வரும் ஆனால் மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் அவ்வளவாக வராது. அவர்கள் நேரம் எடுத்து வரிகளுக்காக வேலை செய்வர் அது தான் காரணம் என்று கூறினார்.

    அம்மாவின் தமிழ் ஆளுமை மற்றும் உதவி

    நான் சிறியவனாக இருக்கும் போது அம்மா தான் எனக்கு இசை கற்று கொடுப்பார் மற்றும் அம்மா அருணகிரி நாதரின் திருபுகழை பாடுவார்கள் அதில் அம்மா ஸ்பெஷலிஸ்ட் இப்போது கூட தமிழில் ஏதாவது தெரிய வேண்டும் என்றால் அம்மாவை தான் கேட்பேன் என்றார் சித்.

    Interview with playback singer Sid Sriram

    பாடகி ஸ்ரேயா கோசால் பற்றி

    அவர் ஒரு சிறந்த பாடகர் நடந்து முடிந்த ஜி தமிழ் விருது விழாவில் என்னை பாட சொல்லும் போது நான் பாடல் வரிகளை மறந்தேன் அவர் மொபைலை கொடுத்து உதவினார். மற்றும் இவர் ஒரு டேடிகேட் ஆன பாடகி அவரது ஒவ்வொரு மொழி பாடல்களின் உச்சரிப்பு அற்புதம். எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உள்ளது என்று கூறினார்.

    ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த வாய்ப்பு

    இதே மாதம் பத்து வருடங்களுக்குப் முன்பு நான் அனுப்பிய மெயிலை பார்த்து என்னை அடையாளம் கண்டு பாட வைத்தார் அதற்கு மிகப் பெரிய நன்றி. அவரால் தான் நான் இன்று இங்கு நிற்கிறேன். ரஹ்மான் சாருக்கு நன்றி சொன்னால் போதாது அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

    Interview with playback singer Sid Sriram

    இசைஞானி இளையராஜாவை பற்றி

    அவர் இசையில் பாடியது ஒரு மிகப் பெரிய அனுபவம். பாடல் பாட நான் சென்றபோது ராஜா சார் வந்தார் அவரது கண்ணில் ஒரு தீயை பார்த்தேன் அப்படி ஒரு வேகம் உழைப்பில். எனக்கு எப்படி பாட வேண்டும் என்று கற்றும் கொடுத்தார். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம் கொடுத்தது.

    முதல் குத்து பாட்டு எப்படி இருந்தது

    நான் இதுவரை மெலடி பாடல்கள் தான் அதிகம் பாடினேன். தமிழரசன் படத்தில் என்னை குத்து பாடல் ஒன்றை பாட வைத்துள்ளார். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ரசிகர்கள் மற்றும் ரசிகைகளுக்கு என்ன கூற விரும்புகிறார்கள். மிகவும் நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை என் இசையை இவ்வளவு காலமாக ரசிக்கின்றனர் மற்றும் என் பாடல்களை ஹிட் செய்ததும் இவர்கள் தான். அவர்களுக்காக என் இசை தொடரும். மறுபடியும் அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    English summary
    Interview with playback singer Sid Sriram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X