200 பொண்ணுங்க ஒரு ஷோவை புக் பண்ணி பார்த்தாங்க.. இரண்டாம் குத்து இயக்குநர் சந்தோஷ் பேட்டி!

சென்னை: இரண்டாம் குத்து பட இயக்குநரின் இரண்டாம் பாகம் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

2 AAM KUTHU கருத்து சொல்ற படம் |DIRECTOR SANTOSH P JAYAKUMAR CHAT PART-02| FILMIBEAT TAMIL

தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் ரிலீசாகி உள்ள இரண்டாம் குத்து படம் முரட்டு வெற்றியை பெற்றுள்ளது.

இந்த படத்தில் வெறும் ஆபாசம் மட்டும் இல்லை. அதை தாண்டி ஒரு நல்ல கருத்து உள்ளது என இயக்குநரும் ஹீரோவுமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தியேட்டரில் முரட்டு குத்து

தியேட்டரில் முரட்டு குத்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி உள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தை படத்தை பற்றி முதல் பாக பேட்டியில் ஏகப்பட்ட விஷயங்களை இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசி இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் படத்தின் கதைக்களம் குறித்து தெளிவாக பேசியுள்ளார்.

18+ என்றால் என்ன?

18+ என்றால் என்ன?

18+ முத்திரை குத்தப்பட்டு ஆபாச படம் என விமர்சிக்கப்பட்டு வருவதை எப்படி பார்க்குறீங்க, என்ற கேள்விக்கு, 18 வயசானால் தான் ஓட்டு போட சொல்றாங்க, 18 வயசு ஆனவர்கள் என்றால் மெச்சூரிட்டி ஆனவர்கள் என அர்த்தம். என் படத்தோட ஆடியன்ஸே 18 முதல் 30 வரை உள்ள நபர்கள் தான் என்றும் கூறினார்.

200 பெண்கள் ஒரு ஷோவில்

200 பெண்கள் ஒரு ஷோவில்

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து என தொடர்ந்து அடல்ட் படங்களாக இயக்கி வருகிறீர்களே, உங்க படத்துக்கு, பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்கா? தியேட்டருக்கு வந்து பார்க்குறாங்களா என கேட்டதற்கு, இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியான போது, தனியார் கல்லூரி மாணவிகள் 200 பேர் ஒரு ஷோவை புக் பண்ணி பார்த்தார்கள். அந்த தகவலை அறிந்து அங்கே சென்ற எங்களிடம் படம் சூப்பரா இருக்கு என பாராட்டி செல்ஃபி எடுத்துக் கொண்டனர் என்றும் கூறி சிரித்தார்.

தனியாவே தேங்க்ஸ் சொன்னேன்

தனியாவே தேங்க்ஸ் சொன்னேன்

இரண்டாம் குத்து படத்தை பற்றி பலரும் தப்பாக பேசி, போர்க் கொடிகளை தூக்கி வரும் நிலையில், நடிகர் சாம்ஸ் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ஆன விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறாரே எனக் கேட்டதற்கு, அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்த படத்தின் கதை என்ன என்பது அவருக்கு நல்லாவே தெரியும். அவருக்கு தனியாவே போன் பண்ணி தேங்க்ஸ் சொன்னேன் என்றார்.

கருத்துள்ள படம்

கருத்துள்ள படம்

ஓவரா சரக்கடிச்சாலும் தப்பு ஓவரா.. அதை பண்ணாலும் தப்பு என்கிற வசனத்தை ஒரு பெண்ணை வைத்து சொல்ல சொல்லி இருப்பேன். பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டும். அவர்கள், ஃப்ரீயா இருக்கக் கூடாது வெளியே சுத்தக் கூடாது. பிடித்ததை செய்யக் கூடாது என எண்ணும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்கிற கருத்து இந்த படத்தில் நிறையவே இருக்கு என்றார்.

சிவராஜ் சித்த வைத்திய சாலை

ராஜ் டிவியில் இரவு வரும் சிவராஜ் சித்த வைத்திய சாலை நிகழ்ச்சிக்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம் இருக்கா என்கிற கேள்விக்கு, சிவராஜுக்கும் இந்த படத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றார். அவரை போலவே தானே நீங்களும் அடல்ட் கருத்துக்களை கூறுகிறீர்கள் என்றால், இது இளைஞர்களுக்கு தேவையான பாடம். அதை மறைத்து வைத்து ஏமாற்றக் கூடாது என பளிச்சென சந்தோஷ் பேசும் இரண்டாம் குத்து படத்தின் இரண்டாம் பாக பேட்டியை மிஸ் பண்ணிடாதீங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X