குழந்தைக்கு பால் கொடுக்கும் சீன்.. 27 டேக் போச்சு.. ரேகா நாயரின் அதிரடியான பதில்!
சென்னை: சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக அறிமுகமான நடிகை ரேகா நாயர், விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் சீரியலின் மூலம் நடிகை அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், ரேகா நாயர் அது குறித்து பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
இதில், இயக்குநர் பார்த்திபன் சார் என்னிடம் இரவின் நிழல் படம் குறித்து என்னிடம் பேசிய போது, நீங்க ஒரு குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருப்பீர்கள், அப்படியே இறந்துவிடுவீர்கள் என்று சொன்னார். படப்பிடிப்புக்கு போதுதான், என்னை கேரவனில் தனியாக அழைத்து, இப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி, ஒரு பக்க மார்பகம் தெரியவேண்டும் என்று சில விஷயத்தை சொன்னார். அது தான் பைனல் நடிப்பு என்று தான் சொல்லப்பட்டது. ஆனால், ஏதோ ஒரு சில காரணத்தால், மீண்டும் படப்பிடிப்பு நடந்தது. அப்படியே அந்த சீன் மட்டும் 27 டேக் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் என்றால், இதற்கான ஒத்திகையே 35 நாட்களுக்கு மேல் சென்றது

ரேகா நாயர்: இயக்குநர் பார்த்திபன் சார் என்னிடம் கதையை சொன்னார், அந்த கதையை உள்வாங்கி நான் நடிச்சேன். எந்த இயக்குநர் என்ன கதையை கொடுத்து இருந்தாலும், நான் அதில் நடித்து இருப்பேன். நான் கதகளி படத்தில் கமிட்டான போது, நைட்டில் வந்து விஷாலுக்கு காஃபி கொடுத்துவிட்டு, சிரித்துவிட்டு சென்று இருப்பேன். அந்த கதாபாத்திரம் ஒரு சாதாரண கதாபாத்திரம் அதில், முழுவதுமாக மூடி நடித்திருப்பேன் அந்த கதாபாத்திரம் ஏன் பேசப்படவில்லை. அதே போல, போக்கிரி ராஜா படத்தில் பைத்தியக்காரியாக மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தேன். அதை யாரும் ஏன் பார்க்கவில்லை. அப்போது, மக்களின் பார்வை எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதைத் தான் நான் பார்க்கிறேன்.
எனக்கு அந்த படத்தின் கதையை சொல்லும் போது, எனக்கு இயக்குநர் கொடுத்த கதாபாத்திரமாகத்தான் நான் மாறுகிறேன். என்னை செருப்பாக நிற்க சொன்னால், வாசலில் தான் நிற்பேன்.. ரேகா... உன்னுடைய கதாபாத்திரம் இன்று பூ என்றால், சாமியின் தலையில் ஏறி உட்கார்ந்து இருப்பேன். நீங்கள் என்ன கதாபாத்திரமாக வேண்டும் என்று கேட்கிறீர்களோ... அதுவாக நான் மாறுவேன். கலை நான் அப்படித்தான் பார்க்கிறேன், அப்படித்தான் படித்து இருக்கிறேன். நம்ம தமிழ் சினிமாவில் மட்டும் தான் ஹீரோ, ஹீரோயின் என்று சொல்கிறார்கள். மற்ற மொழிகளில் கதாபாத்திரம் மட்டும் தான். ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயினை வைத்து மட்டும் படம் பண்ணவே முடியாது. அனைத்து கதாபாத்திரத்திற்கான நடிகர்களும் தேவைப்படுகிறார்கள். இதனால், நீங்கள் படம் முழுக்க வருகிறீர்களா... இல்லை ஒரு காட்சியில் வருகிறீர்களா என்பதெல்லாம் இல்லை. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், அந்த காட்சி மக்களிடம் சென்றடைய வேண்டும் பேசப்பட வேண்டும் இவ்வளவு தான். அதுமட்டுமில்லாமல் இந்த உலகம் யாரைத்தான், எந்த பெண்ணைத்தான் வசைபாடாமல் இருந்து இருக்கிறது. இதனால், என்னை நோக்கிவரும் விமர்சனத்தை நான் காதில் வாங்கிக் கொள்ளாமல் காது கேக்காது போடா என சென்றுவிடுவேன் என நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











