Don't Miss!
- News
"கர்ப்பமான அப்பா.." இந்தியாவில் இதுதான் முதல்முறை.. திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி! அடடே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித் என் நடிப்பை பார்க்க ஆவலா இருக்காரா? இது வதந்தி இல்லையே- எஸ்.ஜே.சூர்யா காமெடி!
புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ் வதந்தி. அமோசன் ப்ரைமில் ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த வெப்சீரிஸை கதை, திரைக்கதை எழுதியுள்ள ஆன்ட்ரூஸ் வசந்த் இயக்கியுள்ளார்.
சைமன் கிங் இசையமைத்துள்ளார். திலிப் சுப்புராயன், தினேஷ் சுப்புராஜன் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் புஷ்கர் காயத்ரி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் லைலா, சஞ்சனா, இயக்குநர் ஆன்ட்ரூ வசந்த் ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கோலிவுட்டில்
13
ஆண்டுகள்..
சூர்யா
42
குழுவினருடன்
கேக்
வெட்டி
கொண்டாடிய
யோகிபாபு!

அனைவருக்கும் பிடிக்கும்
கேள்வி: புஷ்கர் & காயத்ரி, வதந்தி வெப்சீரிஸில் உங்களுக்கு பிடித்த வசனம்...
பதில்: இப்படத்தில் நிறைய சுவாரஸ்யமான வசனங்கள் இருக்கிறது. அவற்றை நாங்கள் கூறினால் நன்றாக இருக்காது. உண்மை நடக்கும்; பொய் பறக்கும் என்ற வசனம் தற்பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கான வசனம் எழுதுவதற்காக, மீரா மொய்தீன் உதவியாக இருந்தார். எஸ்.ஜே.சூர்யா டயலாக் பேசும்பொழுது, இசையுடன் டயலாக் வரும். சினிமாத்துறைக்கு வருகின்ற இளைஞர்களுக்கு இந்த காட்சிகள் உறுதுணையாக இருக்கும். இந்த காட்சிகளுக்கு நடித்ததற்காகவே எஸ்.ஜே. சூர்யாவிற்கு பி.எச்.டி. பட்டம் கொடுக்கலாம் என்றார். இது குறித்து எஸ்.ஜே. கூறுகையில், இந்த தொடரானது 240 நாடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது. அனைவருக்கும் தமிழ் என்பது தெரியாது. பொதுவாக ஆங்கிலத்தில் பேசும்பொழுது, ஒரு வித உணர்வுடன் நமக்கு ஆங்கிலம் புரியும். ஆனால் ஸ்பானிஷ் மொழி பேசினாலே அனைவருக்கும் பிடிக்கும். எனவே நான் பேசும் வசனத்தை இசையுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக அவ்வாறு அமைத்தோம் என்றார்.

திரும்ப... திரும்ப...
கேள்வி: இயக்குநர் ஆன்ட்ரூஸ், உங்களுக்கு படத்தில் பிடித்த காட்சி எது?
பதில்: இப்படத்தில் 4.30 நிமிடம் காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது. அப்பொழுது எஸ்.ஜே.சூர்யா 7 பக்கத்திற்கான வசனங்களை ஒரே ஷாட்டில் நடித்து கொடுத்தார். அவ்வாறு இடம்பெற்ற வசனங்களை ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு எமோஷன் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு எமோஷனுக்கும் எஸ்.ஜே.சூர்யா கையசைவுகள் இடம் மாறி கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஒரு பாடலை நாம் எடிட் செய்து விட்டு, திரும்ப திரும்ப பார்ப்பது வழக்கம். பாடல்களை பார்ப்பது போல், இந்த காட்சிகளை நான் திரும்ப, திரும்ப பார்த்தேன் என்றார்.

வாலி படத்தின் உதவி இயக்குநர்
கேள்வி: எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தை பார்ப்பதற்கு அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆவலாக உள்ளாரா?
பதில்: நடிகர் அஜித்துடன் நான், வாலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து தற்பொழுது இந்த படத்தின் இயக்குநர் ஆன்ட்ரூஸ் வசந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளோம். தற்பொழுது சினிமாத்துறையில் புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் பரவி வருகிறது. உண்மையா என்று தெரியவில்லை. எனக்கு வந்த தகவலின்படி அஜித் குடும்பத்தினர் இப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக சினிமாத்துறையினர் தெரிவித்து வருகின்றனர் என்றார்.
அழுத்தமான கதாபாத்திரம்
கேள்வி: சஞ்சனா, உங்கள் முதல்படமான இதில் இறக்கின்ற காட்சிகள் வருகிறது. அதில் நடிக்க உங்களுக்கு தயக்கம் இல்லையா?
பதில்: நான் யூடியூப் சேனலில் ஜாலியான கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்தேன். என்னிடம் கதை கூறும்பொழுது, கொலை செய்யப்படுகின்ற ஒரு பெண் கதாபாத்திரம் என்று கூறினர். இந்த படத்தில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் இது தான். ஜாலியான கதாபாத்திரம் ஏற்று நடித்த எனக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் தேவைப்பட்டது. நான் இறக்கும் காட்சியில் நடித்தபிறகு, கேமரா முன்பு சிரித்து கொண்டே எழுந்து வா என்றனர். முதலில் எனக்கு அது குறித்த விபரம் தெரியவில்லை. பின்பு தான் எனக்கு தெரியவந்தது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/1pAcfFoIAKs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.