பல கோடிக்கு அதிபதியாகும் அனிருத்.. கலாநிதி மாறனின் மகளுடன் காதலா? பயில்வான் பகீர் தகவல்!
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக இருக்கிறார் அனிருத். அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை குறித்து பாலிவுட் சினிமா வரை தடம் பதித்துள்ளார் அனிருத். இவர் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாக பகீர் தகவல் ஒன்றை பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
புதிய சிந்தனை என்ற youtube ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது உண்மைதான். அமெரிக்காவிற்கு சென்று காதலித்தார்கள். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. ஆனால், இது பெரிய இடத்து விவகாரம் என்பதால் வெளியே தெரியாமல் இருக்கிறது. பெரிய இடம் என்பதால் எதற்கு நமக்கு பிரச்சனை என்று அனைவரும் இந்த விஷயத்தை யார் முதலில் சொல்வார்கள் அதன் பின், நாம் செய்தி போட்டுவிடலாம் என இருக்கிறார்கள். ஆனால், ரெண்டு பேரும், நெருக்கமாக இருப்பதும் செய்திகளில் வந்துவிட்டது. அதே போல, அண்மையில் அந்த SRH ஐபிஎல் போட்டியில் கூட இருவரும் ஒன்றாக இருந்தார்கள்.

காதல் கிசுகிசு: இது உறுதியான தகவலாக இருந்தாலும் பெரிய இடத்து விவகாரம் என்பதால் நாமும் பட்டும் பாடமல், கூறப்படுகிறது என்று சொல்லிவிடலாம். இல்லை என்றால், நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகினோம் என்று இருவரும் சொல்லிவிட்டால் நமக்கு தான் பிரச்சனையாகி விடும். இந்த செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்துவிட்டது. ஆனால், இருதரப்பிடமிருந்தும் எந்தவிதமான மறுப்பும் வரவில்லை. அனிருத்திற்கு எப்போது திருமணம் செய்து வைக்கலாம் என அவரது குடும்பத்தினர் இருக்கிறார்கள். ஏன் என்றால் அனிரும் ஜாலியான பேர் வழி எப்போதும், ஜாலியாகவே இருப்பார். அப்படி இருந்தவரைத்தான் தனுஷ் இசையமைப்பாளராக்கினார்.
பாக்கத்தான் ஒல்லி: அனிருத்திற்கு முறையாக இசைப்பயிற்சி எதுவும் இல்லை. அதன் பின் தான் அவர் இசையை முறையாக கற்றுக் கொண்டார். ஏ.ஆர்.ரகுமானையும் இளையராஜாவையும் கலந்து அனிருத் இசையமைத்து வருகிறார். இதனால், இன்றைய காலத்தை இளசுகளுக்கு இவரின் இசை மிகவும் பிடித்திருக்கிறது. அண்மைக்காலமாக வெளியான சன் பிக்சர்ஸ் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவது அனிருத் தான். இப்படி அனிருத் புகழின் உச்சியில் இருக்கிறார். அனிருத் பார்ப்பதற்கு ஒல்லியான உருவமாக இருந்தாலும், அவருக்கு வீரியம் அதிகம். முதலில் ஆண்ட்ரியா உடன் நெருக்கமாக பழகினார். அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றது. ஆனால், பின் அது நடக்காமல் போய்விட்டது.
பல ஆயிரம் கோடி சொத்து: ஆனால், பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் கலாநிதி மாறனின் ஒரே மகள் தான் காவ்யா மாறன், அமெரிக்கா மற்றும் லண்டனில் படித்து வந்த இவர், தற்போது சன் டிவியின் எம்.டி.யாக இருக்கிறார். நன்றாக நிர்வாக திறன் படைத்தவர் தான் காவ்யா மாறன். இருவரும் அமெரிக்காவிற்கு சென்ற போது தான் இவர்களின் காதல் விவகாரம் வெளியில் கசியத் தொடங்கியது. ஆனால், இரண்டு தரப்பில் இருந்தும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. அனிருத் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும், ஒரு வகையில் ரஜினிகாந்தின் சொந்தம், பாரம்பரிய குடும்பம் என்பதால், கலாநிதி மாறன் இவர்களின் காதலுக்கு ஒகே சொல்லுவார் என்று நம்பப்படுகிறது என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார். ஆனால், இதுகுறித்து அனிருத் தரப்பில் இருந்தோ, காவ்யா மாறன் தரப்பில் இருந்தோ எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











