வலிமையில் அஜித் தம்பியாக நடித்தவர் இவருடைய மகனா ?...வெளியான சுவாரஸ்ய தகவல்
சென்னை : வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் பிரபல நடிகர் ஒருவரின் மகன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தான் யார், இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி அவரே ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அஜித் நடித்த வலிமை படம். ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் கபூர் தயாரித்துள்ள இந்த படம் முதல் நாள் வசூலில் ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர் படங்களை தாண்டி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. நெகடிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும் இந்த படத்தை அஜித்தின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
வலிமை படத்தில் சட்ட விரோத பைக் ரேஸ், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் போலீஸ் அதிகாரி ஏசிபி அர்ஜுன் ரோலில் அஜித் நடித்துள்ளார். வில்லன் குரூப்பில் சிக்கிய, வேலை வெட்டி இல்லாத, போதைப் பொருளுக்கு அடிமையான தம்பியாக ராஜ் ஐய்யப்பா நடித்துள்ளார். போதைப் பொருள் கும்பலிடம் இருந்து தனது தம்பியை எப்படி அஜித் காப்பாற்றுகிறார், குற்றங்களை எப்படி தடுக்கிறார் என்பது தான் வலிமை படத்தின் கதை.

அஜித் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பா பேட்டி
அஜித்தின் தம்பியாக நடித்துள்ள ராஜ் ஐயப்பா ஃபிலிமிபீட்டிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கீகாரம் இல்லாமல், அடையாளம் காட்டப்படாத ஒரு கேரக்டர் நிச்சயம் இருக்கும். எனது ஃபிரண்ட்ஸ் வட்டாரத்திலேயே அப்படி நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவர்களின் உணர்வுகளை ஈஸியாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அது இந்த கேரக்டரில் நடிக்க எனக்கு உதவியாக இருந்தது. மக்களுக்கும் இது நிச்சயம் புரியும். ஏனென்றால் அவர்களும் இப்படியொரு கேரக்டரை பார்த்து பழகி இருப்பார்கள் என்றார்.

வலிமை வாய்ப்பு கிடைத்தது எப்படி
தனக்கு எப்படி வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதை சொன்ன ராஜ் ஐய்யப்பா ஆச்சரியமான தகவல் ஒன்றை சொன்னார். அவர் கூறுகையில், நான் லயோலா காலேஜில் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு மதியம் தான் காலேஜ் இருக்கும். அதனால் மீதமுள்ள நேரங்களில் ஏதாவது செய்யலாம் என யோசித்து, எனது அப்பாவின் நண்பரும், அஜித்தின் மேனேஜருமான சுரேஷ் சந்திராவிடம் வேலைக்கு சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு முறை அஜித் சாரிடம் போனில் பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய ஆபீசில் ஒரு பையன் வேலை பார்க்கிறான். அவன் யார் என தெரியுமா என சுரேஷ் சந்திரா, அஜித்திடம் கேட்டுள்ளார்.

அட இந்த நடிகரின் மகனா இவர்
அதற்கு அஜித்தும் யார் என கேட்க, சுரேஷ் சந்திராவோ, நீங்கள் ஹீரோவாக அறிமுகமான அமராவதி படத்தில் உங்களின் நண்பராக கெளதம் கேரக்டரில் நடித்த பானு பிரகாஷின் மகன் தான் அந்த பையன் என கூறி உள்ளார். உடனே அஜித்தும், அந்த பையனின் போட்டோவை அனுப்பி வை என கேட்டுள்ளார். இப்படி தான் வலிமை படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.
ஓ...அவரா இவர்
பானு பிரகாஷ் வேறு யாருமில்லை. நடிகர், ஈவன்ட் மேனேஜர், தயாரிப்பாளர் என பலமுகங்களையும், பல திறமைகளையும் கொண்டவர். தலைவாசல், அமராவதி, அதே மனிதன் போன்ற பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த இவர், சொர்க்கம், அர்ச்சனை பூக்கள், அண்ணாமலை, செல்வி, வம்சம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications