»   »  ஹிப் ஷேக் இஷா!

ஹிப் ஷேக் இஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முழுப் படத்தில் நடிப்பதை விட குத்துப் பாட்டுக்கு ஆடுவதற்குத்தான் ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கிறதுஎன அலுத்துக் கொள்கிறார் இஷா கோபிகர்.

ரொம்ப நாளைக்கு முன்பு தமிழ்ப் பக்கம் வந்து அட்ரஸ் கிடைக்காமல் பாலிவுட்டுக்குத் திரும்பிப் போனவர்இஷா. தமிழில் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் பாலிவுட்டில் இவரை தாங்கு தாங்கென்றதாங்க ஆள் கிடைத்ததால் படு வேகமாக அங்கே ஹிட் ஆனார்.

கிளாமர் ஆட்டத்தில் இஷா இப்போது சக்கை போடு போடுகிறார். பாடல்களில் கிளாமராக ஆடுவதற்கும், குத்துப்பாட்டுக்கும் 6 வித்தியாசம் என்ன என்று கேட்டால் விலாவாரியாக விளக்குகிறார் இஷா.

எனக்கு ஒரு பாட்டு என்றாலும், படம் பூரா கிளாமர் என்றாலும் இரண்டும் ஒன்றுதான். ஒரு குத்துப் பாட்டுக்குமட்டும் ஆடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அதில் வேலை ஜாஸ்தியாக இருக்கும்.

மொத்த ரசிகர்களின் கவனமும் நம்ம மேலேதான் இருக்கும் என்பதால் குத்துப் பாட்டுக்கு நிறையமூவ்மென்ட்ஸ்களை டான்ஸ் மாஸ்டர்கள் வைப்பார்கள். அவற்றை பிக்கப் செய்து ஆடுவது ரொம்பக் கஷ்டமானவிஷயம். அதனால்தான் எல்லோரையும் குத்துப் பாட்டுக்கு ஆடக் கூப்பிட மாட்டார்கள். டெக்னிக்கல் நெக்தெரிந்தவர்களைத்தான் ஆட அழைப்பார்கள்.

குத்துப் பாட்டில் குறிப்பாக இடுப்பசைவுக்கு நிறைய வேலை கொடுத்தால்தான் பாட்டும், ஆட்டமும் படு சூப்பராகஇருக்கும். ஹிப் ஷேக்தான் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதுபோன்ற ஆட்டத்தில் நான் பட்டையைக் கிளப்பிவிடுவேன்.

நம்முடைய ஒவ்வொரு அசைவும் போட்டி போட்டுக் கொண்டு பின்னி எடுக்கனும். அப்பதான் ரசிக்க வசதியாஇருக்கும், ரசிகர்களுக்கும் குஷியைக் கிளப்பும் என கோனார் தெளிவுரை கணக்காக விளக்கி நிறுத்தினார்கோபிகர்.

கொஞ்ச நாளைக்குதான் இஷா கிளாமரில் முங்கி முத்தெடுப்பாராம். அப்படியே படிப்படியாக அதைக் குறைத்துக்கொண்டு வித்தியாசமான வேடங்களில் விளையாடும் ஆசை இருக்கிறதாம். அதுக்கு இன்னும் வயசு கூடவேண்டுமாம்.

அதுக்குள்ள ஹிப் ஷேக்கில் புதுப் புது ஐட்டங்களை இறக்கி விட்டு ரசிகர்களை ஜாலியாக்குங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil