வண்டி ஓட்டும் போது டயலாக் பேசினா நல்லா இருக்காது.. டிரைவர் ஜமுனா இயக்குநர் சொன்ன டாப் சீக்ரெட்!
சென்னை: 18 ரீலிஸ் எஸ்.பி.சவுத்ரி தயாரிப்பில் வத்திக்குச்சி இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டிரைவர் ஜமுனா.
த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படமானது நவம்பர் 11ம் தேதி வெளிவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கவர்ச்சி தான் காரணம்
கேள்வி: கின்ஸ்லின், நீங்கள் படத்திற்கு ஏன் டிரைவர் ஜமுனா என்று பெயர் வைத்துள்ளீர்கள்?
பதில்: டிரைவர் ஜவகர், டிரைவர் ஜான் என்று வைத்திருந்தால் கவர்ச்சியாக இருக்காது. சாதாரணமாக இருக்கும். பெண் கதாபாத்திரத்தின் பெயர் வைத்து டிரைவர் ஜமுனா என்று வைத்தால் மட்டுமே கவர்ச்சியாக இருக்கும். அதனால் தான் இந்த பெயரை வைத்தோம்.

த்ரில்லர் சம்பவங்கள்
கேள்வி: வாலாஜா, இசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தியது ஏன்?
பதில்: வாலாஜா, இசிஆர் செல்வதற்கு கூகுள் மேப்பில் பார்த்தால் 90 நிமிடங்கள் காட்டும். இதை தான் படமாக்கியுள்ளோம். இடையில் செங்கல்பட்டு காடும் இருக்கும். சென்னையில் குறிப்பிடும்படியாக சில இடங்களே உள்ளன. கதையை 90 நிமிடத்திற்குள் தயார் செய்து படம் எடுத்தது எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இந்த வாலாஜா & இசிஆர் செல்லும் பாதையில், கதைப்படி ஏகப்பட்ட கரடுமுரடான பாதைகளும், த்ரில்லர் சம்பவங்களும் காணப்படும் என்றார்.

இரண்டு நாட்கள் சிரமப்பட்டார்
கேள்வி: நடிகை ஐஸ்வர்யா ராஷேஷ் டூப் இல்லாமல் கார் ஓட்டினாரா?
பதில்: கேப் டிரைவர் பெண்ணாக இருக்கிறார் என்றால் அவர்களது குடும்பத்தின் சூழ்நிலை எப்படியிருக்கும். அவ்வாறு செல்கின்ற அந்த பெண்ணுக்கு எவ்வளவு மனதைரியம் இருக்கும். எல்லா பெண்களும் டிரைவராக போகமாட்டார்கள். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சாதாரணமாக வண்டி ஓட்டுவது என்பது சாதாரணம். அதிலும் படப்பிடிப்பின்போது நடித்துக் கொண்டு, வண்டி ஓட்டுவது என்பது மிகவும் சிரமம். முதல் இரண்டு நாட்கள் சிரமப்பட்டார்கள். சென்னை சாலைகள் மேடு, பள்ளம் இருக்கும்போது, அதில் வண்டியை ஓட்டி கொண்டு நடிப்பை வெளிப்படுத்தினார். நாம் நினைத்திருந்தால் கார் ஓட்டுவதை டூப் போட்டு செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்தால் காட்சிகள் நன்றாக வந்திருக்காது.

இரண்டுக்கு பதில் நான்கு கார்
கேள்வி: படத்தை பட்ஜெட்டுக்குள் முடித்து விட்டீர்களா?
பதில்: முதலில் இரண்டு கார் வேணும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டேன். பட்ஜெட்டை குறைப்பதற்காகவும், சில காரணங்களுக்காகவும் பிறகு நான்கு கார்கள் வாங்கினோம். தயாரிப்பாளர் என் மீதும், கதை மீது நம்பிக்கை வைத்து, நான் கேட்கக்கூடிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அதன் பலனாகவே படம் நன்றாக வந்துள்ளது.

படத்தின் பலம்
கேள்வி: உங்களுக்கு பிடித்த டயலாக் எது?
பதில்: இப்படத்தில் டயலாக் என்பது குறைவு. சாலையில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர். காட்சிகள் மட்டுமே முக்கியம். கால் டாக்சி என்பது ரொம்ப கண்ட்ரோலாக இருக்கும். அதில் டயலாக் பேசினால் நன்றாக இருக்காது. அதுமட்டுமின்றி கார் வேகம், எமோஷனல் ஆகியவை இடம் பெறுகிறது. எந்த இடத்தில் டயலாக் அவசியமோ அந்த இடத்தில் தான் டயலாக் இடம்பெறும். டயலாக் தாண்டி நடிகர்களின் நடிப்பு தான் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றார்.

மிகப்பெரிய வாய்ப்பு
கேள்வி: மற்ற நடிகர்களின் எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?
பதில்: பொதுவாக கதை எழுதி முடித்தவுடன் தான், நடிகர்களின் தேர்வு செய்வது வழக்கமாக இருக்கும். ஆனால் நான் இந்த கதையை எழுதும்போது இந்தந்த கேரக்டர்களை இவர்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். குறிப்பாக நடிகர்கள் நரேன், ஸ்ரீரஞ்சனி, கவிதா பாலாஜி, அபிஷேக், ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பி மணிகண்டன், எனக்கு பிடித்த குறும்படத்தில் நடித்த சீனி, நாடக நடிகர் கலைர், மாஸ்டர் படத்தில் நடித்த நவீன், சார்பட்டா படத்தில் நடத்த சரவணவேல் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இப்படத்தில் நடித்த அனைவருக்கும் சினிமாத்துறையில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்றார்.
பயம் காட்டவில்லை
கேள்வி: ரசிகர்களை பயமுறுத்துவதற்காக படத்தை எடுத்தீர்களா?
பதில்: சில நேரங்களில் வீட்டில் தனியாக இருக்கும்போது, நாம் பயப்படுகிறோம். அது போல் பெண் கேப் டிரைவர் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார். அவருடைய பயத்தை தான் படத்தில் காட்டியுள்ளோம். மேலும் அப்பிரச்னையில் இருந்து அப்பெண் எப்படி வெளியே வருகிறார் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு காட்டியுள்ளோம். ரசிகர்களை பயம்காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை நாங்கள் எடுக்கவில்லை. இந்த த்ரில்லர் படத்தை ஒரு தடவை பார்க்கும் படமாக இருக்காது. திரும்ப, திரும்ப பார்க்கும் படமாக கண்டிப்பாக இருக்கும். நாம் வீட்டு பொண்ணு ஒரு பிரச்னையில் மாட்டிக் கொண்டால், அந்த பிரச்னையை எப்படி சமாளிக்கிறார்? எப்படி வெளியே வருகிறார் என்பது தான் முக்கியம் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/PTlUNEcoIcQ இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications