இந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்

By Siva

சென்னை: இந்த வயதில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.

சிம்ரனுக்கு முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக இல்லை. இந்நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லாவிட்டாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இது குறித்து சிம்ரன் கூறியிருப்பதாவது,

எளிமை

எளிமை

ரஜினி சார் மிகவும் எளிமையான மனிதர். சூப்பர் ஸ்டார் என்ற பந்தாவே இல்லாதவர். அவர் என் சூப்பர் ஹீரோ. அயர்ன் மேன், சூப்பர் மேன் வருவதற்கு முன்பே அவர் என் சூப்பர் ஹீரோ. அவருடன் சேர்ந்து நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தலைவருடன் சேர்ந்து நான் நடித்த முதல் படம் பேட்ட. இது எனக்கு பெரிய விஷயம்.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

ரஜினி ஹீரோயின்களுக்கு வழக்கமாக கிடைக்கும் கதாபாத்திரத்தில் இருந்து உங்களின் கதாபாத்திரம் வேறுபட்டு உள்ளது என்று மக்கள் சொல்வதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. என்னை தலைவருடன் சேர்ந்து பார்ப்பதில் ரசிகர்களுக்கு சந்தோஷம். என் வயது நடிகைக்கு கிளாமரான கதாபாத்திரம் கிடைப்பது மிகவும் அரிது.

அரிது

அரிது

சிங்கிள் தாயாக அதுவும் 40களில் இருக்கும் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது இல்லை. ரஜினி சாருடனான என் முதல் படம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பேட்ட அப்படியே அமைந்துவிட்டது. இதற்காக நான் கார்த்திக் சுப்புராஜுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

தூக்கம்

தூக்கம்

நான் உணவு, தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். நாம் நம்மை பற்றி நன்றாக நினைப்பது மிகவும் முக்கியம். என் இரண்டாவது மகன் பிறந்த பிறகு உடல் எடையை குறைக்க வேண்டியது இருந்தது. அது எளிது அல்ல. ஆனால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் அது கடினம் இல்லை என்கிறார் சிம்ரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X