twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ஆஸ்கர் வென்றது போல் உணர்கிறேன்”... தேசிய விருதால் ரித்திகா ஹேப்பி அண்ணாச்சி!

    |

    சென்னை: ஆஸ்கர் விருதைப் பெற்றது போல் உணர்வதாக, தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகை ரித்திகா சிங்.

    63வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இறுதிச் சுற்று படத்தில் நடித்ததற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தன் அறிமுகப் படத்திலேயே தேசிய விருது கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ரித்திகா.

    தரை லோக்கல்...

    தரை லோக்கல்...

    குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா, இறுதிச் சுற்றுப் படத்திலும் அதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தரை லோக்கலான அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

    ஆஸ்கர் மகிழ்ச்சி...

    ஆஸ்கர் மகிழ்ச்சி...

    இந்நிலையில், தேசிய விருது கிடைத்தது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘தேசிய விருது கிடைத்திருப்பதை ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்வதாக' ரித்திகா சிங் குறிப்பிட்டுள்ளார்.

    நன்றி...

    நன்றி...

    மேலும், தனது மகிழ்ச்சி குறித்து அவர் கூறுகையில், "வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். ஆஸ்கர் விருது வென்றிருப்பது போன்று உணர்கிறேன். 'இறுதிச்சுற்று' மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஊக்கம்...

    ஊக்கம்...

    முதல் படத்திலேயே இப்படி ஒரு விருது கிடைக்கப் பெறுவது ரொம்ப பெரிய விஷயம். இன்னும் நன்றாக செயல்படுவதற்கான ஒரு ஊக்கமாக கருதுகிறேன்.

    இயக்குநரின் ஆதரவு...

    இயக்குநரின் ஆதரவு...

    இயக்குநர் சுதா மற்றும் மாதவன் குறிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான ஆதரவும், என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையும் இல்லையென்றால் நான் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன் " என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Kick boxer-turned-actress Ritika Singh describes her bagging a National Award under Special Mention category for her performance in Tamil sports drama “Irudhi Suttru” as equal to winning an Oscar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X