இது என் பழி வாங்கும் படலம்.. யாரையும் விட மாட்டேன்: ஸ்ரீரெட்டி சபதம் - Exclusive

தன்னை ஏமாற்றியவர்களைப் பழி வாங்கவே சென்னை வந்துள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

Recommended Video

சினிமா வாய்ப்பு பற்றி விவரிக்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ

சென்னை: தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியவர்களை பழிவாங்கவே சென்னை வந்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார் கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா உலகை பரபரப்பாக்கியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் ஒவ்வொரு பெயராக வெளியிட்டு, பலரையும் கதிகலங்க வைத்தவர் அவர்.

நடிக்க வாய்ப்பை தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டவர்களை நிச்சயம் பழிவாங்குவேன் என ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது,

உங்களைப் பற்றி...

உங்களைப் பற்றி...

முதலில் நான் ஒரு சாதாரண சராசரிப் பெண். மற்றவர்களைப் போலவே எனக்கும் நிறைய செண்டிமெண்டுகள் இருக்கின்றன. நான் மிகவும் பொறுமையானவள், அதுவே எனது மிகப்பெரிய மைனஸ். ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் பொறுமையை இழந்துவிட்டால், என்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது.

பாலியல் தொல்லை:

பாலியல் தொல்லை:

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் அனைத்து நடிகைகளுமே இந்தப் பிரச்சினையை சந்தித்திருப்பர். அவர்கள் அதற்கு ஒத்துழைத்தார்களா, இல்லையா என்பது தனிப்பட்ட விசயம். ஆனால், நிச்சயம் அனைவரும் இதனைத் தாண்டி தான் வந்திருப்பார்கள்.

ஏமாற்றி விட்டார்கள்:

ஏமாற்றி விட்டார்கள்:

எனக்கு முதல் படத்திலேயே இந்த சீண்டல்கள் ஆரம்பமாகி விட்டன. நானும் எனது எதிர்காலத்தை மனதில் வைத்து, வேறு வழியில்லாமல் அனைத்தும் சம்மதித்தேன். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர சொன்னபடி வாய்ப்புகள் தரவில்லை.

உச்சகட்ட கோபம்:

உச்சகட்ட கோபம்:

நானும் பொறுமையாகக் காத்திருந்தேன். ஆனால், இவ்வளவு பொறுமையாக இருந்திருக்கக்கூடாது என இப்போது எண்ணுகிறேன். இப்போது நான் உச்சகட்ட விரக்தி, கோபத்தில் இருக்கிறேன். இனி என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

பதிலுக்குப் பதில்:

பதிலுக்குப் பதில்:

என்னை ஏமாற்றியவர்களை நிச்சயம் பழி வாங்குவேன். என்னுடன் உல்லாசமாக இருந்தபோது எப்படி மகிழ்ந்தார்களோ, அதே அளவிற்கு வலியையும், கசப்பையும் அவர்களுக்கு பதிலுக்கு நான் தருவேன்.

விழிப்புணர்விற்காக..

விழிப்புணர்விற்காக..

எனது இந்த முடிவு விளம்பரத்திற்கானது அல்ல. விளம்பரத்திற்காக யாராவது வாழ்க்கையை பணயம் வைப்பார்களா? எனது இந்த நடவடிக்கைகள் எனக்கானது மட்டுமல்ல. சினிமா துறைக்கு புதிதாக வரும் பெண்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகத் தான் எனது எதிர்காலத்தை நான் சீரழித்துக் கொள்கிறேன்.

விழித்துக் கொள்ள வேண்டும்:

விழித்துக் கொள்ள வேண்டும்:

என்னுடைய வலியை நான் பொறுத்துக் கொள்வதற்கு இதுவே முக்கியக்காரணம். என்னைப் பார்த்து மற்றவர்கள் விழிப்படைய வேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X