அந்த காதல் கிசுகிசு பிரச்சனை காரணமாத்தான் தமிழ் சினிமாவையே விட்டுப் போனேன்.. ஜெய் ஆகாஷ் ஓபன் பேட்டி!
சென்னை: லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரோஜாவனம் படத்தை தொடர்ந்து பெண்கள் எனும் படத்தில் நடித்த அவர் தெலுங்கில் நடிக்க சென்று விட்டார். பின்னர், மீண்டும் ஸ்ரீகாந்த், பூமிகா நடித்து வெளியான ரோஜாக்கூட்டம் படத்தில் பூமிகாவின் காதலராக நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் மனைவிக்கும் ஜெய் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட காதல் கிசுகிசு தான் அவரை தமிழ் சினிமாவை விட்டே விலக்கி விட்டதாகவும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்த காரணமாக அமைந்தது என்றும் ஜெய் ஆகாஷ் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மீண்டும் தமிழில் யோக்கியன் படத்தில் நடித்த ஜெய் ஆகாஷ் ஜெய் விஜயம் எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வரும் ஜெய் ஆகாஷ், சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் சந்தித்த சர்ச்சைகள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
ஜெய் ஆகாஷ்: ரோஜாக்கூட்டம் படத்தில் எல்லாம் ஸ்ரீகாந்தை விட செம சார்மிங்காக சாக்லேட் பாய் போல இருப்பார் ஜெய் ஆகாஷ். லண்டனில் இருந்து வந்த அவர் ஆரம்பத்தில் பல பெரிய படங்களை தமிழ் சரியாக உச்சரிக்கத் தெரியாத காரணத்தினாலே விட்டு விட்டேன் என்றும் கூறியுள்ளார். மாதவன் அறிமுகமான அலைபாயுதே படத்தில் முதலில் இவரைத்தான் மணிரத்னம் ஆடிஷன் செய்தார் என்று கூறியுள்ளார். அதே போல மேலும், சில பெரிய படங்களும் மிஸ் ஆகிவிட்டது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.
யஷ் வளர்ச்சிக்கு காரணம்: ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்த படத்தில் சீரியலில் நடித்து வந்த நடிகர் யஷ் ஜெய் ஆகாஷுக்கு தம்பியாக நடித்தார். அதன் பின்னர், தான் அவர் கன்னட திரையுலகில் ஹீரோவாகவே வளர்ந்தார் என்கின்றனர். ஆனால், அவருடைய வளர்ச்சிக்கு தான் காரணமில்லை என்றும் அது அவருடைய உண்மையான உழைப்பு என்றும் ஜெய் ஆகாஷ் கூறியுள்ளார்.
காதல் கிசுகிசு: நடிகர் விஜய்யின் மனைவி சங்கிதா ஆரம்பத்தில் ஜெய் ஆகாஷைத்தான் காதலித்து வந்தார் என்கிற கிசுகிசு தொடர்ந்து பரவி வரும் நிலையில், அதுதொடர்பான விளக்கத்தை ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் பேசியதும் மேடையிலேயே மறுத்த ஜெய் ஆகாஷ் தனது புதிய பேட்டியிலும், அந்த வதந்தியால் தான் தமிழ் சினிமாவை விட்டே ஓடிப் போய்விட்டேன். அது தன்னை பாதித்ததை விட விஜய் மற்றும் அவரது குடும்பத்தை பாதித்து விடக் கூடாது என்று தான் விலகிச் சென்றேன். இப்போதும் ஏர்போட்டில் விஜய் என்னை சந்தித்தால் பேசுவார். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால், சிலர் வேண்டுமென்றே தேவையில்லாமல் அந்த விஷயத்தை கிளறி ஆதாயம் தேடிக் கொள்கின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications











