“செங்கேணி“யாக வாழ்ந்த லிஜோமோல் ஜோஸ்… ஸ்பெஷல் நேர்காணல் !
சென்னை : ஜெய் பீம் படத்தில் செங்கேணி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஜோமோல் ஜோஸ்.
Recommended Video
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம், பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு பதிவு செய்துள்ளது. இந்தப் படம் தமிழகத்தில் நிறைவான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதில் நடிகர் சூர்யாவுக்கு இணையான புகழையும் பாராட்டையும் பெற்றிருப்பவர் செங்கேணியாய் வாழ்ந்திருக்கும் லிஜோமோல் ஜோஸ் பிலிமி பீட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

எல்லாரும் பயந்துட்டாங்க
பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்த, லிஜோமோள் ஜோஸ்,அந்த பஸ் வரை சீன்ல நான் ரொம்ப பயந்தேன், நான் மட்டும் இல்லாம சினிமா டீம்ல இருக்குற எல்லாருமே ரொம்ப பயந்துட்டாங்க, ஆனா எனக்குள் ஒரு கால்குலேஷன் இருந்துச்சி அத வச்சி நான் வந்து அப்படியே பண்ணிட்டேன் என்றார்.

சவாலான கதாபாத்திரம்
அடுத்ததாக இந்த படத்தில் வந்து எனக்கு ரொம்ப பிடிச்ச டயலாக், நான் டிஜிபி ஆபீஸ்ல போய் பேசுனது அப்புறம், சூர்யா பக்கத்துல உட்கார்ந்து நான் பேசுன வசனம் எனக்கு ரொம்ப புடிச்சது என்றார். தொடர்ந்து பேசிய, லிஜேமோல், ஜெய்பீம் திரைப்படத்தில் படம் முழுக்க நான் கர்ப்பிணியான நடித்திருந்தேன். கர்ப்பிணியா நடிச்சது வந்து எனக்கு ஒரு சவாலான ஒரு கதாபாத்திரமாக இருந்திச்சு இருந்தாலும் அந்த கேரக்டர்ல நான் நடிக்கப் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன்.

மணிகண்டனுக்கு நன்றி
நான் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை நடிச்சிருக்கிற ஆனா தமிழ்ல மூன்றாவது படம் தான் ஜெய்பீம், மூன்றாவது படத்தில் எனக்கு இப்படி ஒரு பெயர் கிடைச்சிருக்கு, நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்துக்காக நான் வந்து ட்ரெய்னிங்ல இருக்கும் போது, தமிழ் தெரியாததால் கஷ்டப்பட்டேன். அப்போது மணிகண்டன் நிறைய ஹெல்ப் பண்ணாரு. மணிகண்டனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என்றார்.
என்னால பண்ண முடிஞ்சது
இந்த ஸ்டோரியை என்கிட்ட சொல்லும்போதே ரொம்ப பிடிச்சிருந்தது, இது ஒரு உண்மை சம்பவம் என்பதால், நடிக்கனும்னு ஆசை பட்டேன். சினிமா மூலமாக நிறைய விஷயங்களை மக்களுக்கு புரியவைக்க முடியும், அப்படி நானும், நம்புறேன் அதனால இந்த கதையை வந்து நான் தேர்ந்தெடுத்து நடிச்சேன் . அந்த மக்களுக்காக என்னால, பண்ண முடிஞ்சது இதுதான்... என்று பல கேள்விகளுக்கு அழகாக பதிலளித்தார் லிஜோமோல் ஜோஸ்.


Click it and Unblock the Notifications











