twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘‘ராஜாகண்ணு’’வாக நடித்ததில் பெருமைப்படுகிறேன்… மனம் திறந்த மணிகண்டன் !

    |

    சென்னை : சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜெய்பீம்.

    Recommended Video

    Surya Sir ரொம்ப Sincere | Actor Manikandan Exclusive | Jai bhim | Filmibeat Tamil

    பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

    'இந்தியன் 2' படத்திலிருந்து விலகினார் காஜல் அகர்வால்... மீண்டும் உருவான புதிய சிக்கல் !'இந்தியன் 2' படத்திலிருந்து விலகினார் காஜல் அகர்வால்... மீண்டும் உருவான புதிய சிக்கல் !

    இத்திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் மணிகண்டன்.

    ஜெய் பீம்

    ஜெய் பீம்

    இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

    உண்மை சம்பவம்

    உண்மை சம்பவம்

    உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில், மணிகண்டன் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில், இருளர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் வாழும் பகுதிக்கு சென்று மக்களோடு பழகியதாக கூறினார்.

    அவமானப்படுத்தி சிரிப்பாங்க

    அவமானப்படுத்தி சிரிப்பாங்க

    மேலும், பேசிய அவர், இருளர் பகுதியில் இருந்த பசங்களிடம் ஸ்கூலுக்கு போங்கடா நிலைமைமாறும், நல்லா படிங்க என்றேன். இதற்கு அங்கிருந்த பசங்க, நீங்க ஸ்கூலுக்கு போக சொல்றீங்க ஆனால், நான் ஸ்கூலுக்கு போய் எப்படி படிக்கிறது நான் ஸ்கூலுக்கு போனாலே என் பக்கத்துல பசங்க யாரும் உட்கார மாட்டாங்க, என் மேல நாத்தம் அடிக்கிதுனு சொல்லுவாங்க, பசங்க எல்லாம் எங்களை அவமானப்படுத்தி சிரிப்பாங்க, ஆசிரியரும் எங்களை பார்த்தா முகம் சுளிப்பாரு இத்தனை அவமானத்துல நாங்க படிக்கனுமா என்று அந்த சிறுவன் கேட்டதாக மணிகண்டன் கூறினார்.

    பெருமைப்படுகிறேன்

    பெருமைப்படுகிறேன்

    அந்த பசங்க சொன்னதை கேட்டு என் மனம் அப்படியே கலங்கிவிட்டது. குழந்தைகள் செய்யும் தவறை திருத்தும் ஆசிரியரின் மனநிலையே மாறவில்லை. கடுமையா உழைக்குறாங்க... கஷ்டப்படுறாங்கா ஆனால் அவர்களுக்கு ஒருவேலை சாப்பாடுதான் கிடைக்கிது.அவர்களின் நிலை மாறவேண்டும். இந்த படத்தில் ராசாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்ததில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

    English summary
    Jai bhim Movie hero Manikandan Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X