நயன்தாராவோட உப்புமா ரொம்ப புடிக்கும்.. ஒரு நாளைக்கு ஒருவேளை தான் சாப்பிடுவேன்.. ஜெய் ஜாலி பேட்டி!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்திற்கான புரமோஷன்களில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் ஜெய்.
பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அவரது டயட் பிளான் பற்றி பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். மேலும், நயன்தாரா கொண்டு வரும் டிஷ்கள் பற்றியும் பேசி கலகலப்பாக்கி உள்ளார்.

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜெய் சென்னை 600028, கோவா, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார்.
லேபில் வெப்சீரிஸ்: ராஜா ராணிக்கு பிறகு நடிகர் ஜெய்க்கு பெரிதாக படங்கள் கை கொடுக்கவில்லை. பல படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லேபில் வெப்சீரிஸ் ஜெய்க்கு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறது. அந்த வெப்சீரிஸில் வழக்கறிஞராக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
மீண்டும் நயன்தாராவுடன்: அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் எக்ஸ் பாய் ஃபிரெண்டாக ஜெய் நடித்திருப்பார். அதன் பின்னர் மீண்டும் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள அன்னபூரணி படத்திலும் தன்னுடன் நடிக்க ஜெய்யையே நயன்தாரா டிக் செய்திருக்கிறார். அந்த லக்கி காம்போ மீண்டும் மேஜிக் செய்யுமா என்பது நாளை தெரிந்து விடும்.

நயன்தாராவின் உப்புமா: அன்னபூரணி படமே சமையல் கதையை மையமாக வைத்த படம் தான். இதில், நடிகர் ஜெய் ஃபர்ஹான் எனும் இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். நயன்தாரா இந்து பெண்ணாக நடித்துள்ள நிலையில், அசைவம் சமைக்கும் போட்டியில் அவர் கலந்து கொள்வதும் அதனால் வரும் பிரச்சனைகளும் தான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கொண்டு வரும் உப்புமாவுக்கு நான் அடிமைங்க, அப்படியொரு டேஸ்ட்டாக இருக்கும். பிரியாணியும் சமைத்து பரிமாறியுள்ளார் என பேசி உள்ளார்.
ஒருவேளை தான் உணவு: ஜெய் அப்பதிலிருந்து இப்போ வரைக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கிறாரே அவரது ஃபிட்னஸ் ரகசியம் தான் என்ன என்கிற கேள்விக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை தான் உண்பேன் என்றும் சூரியன் மறைந்ததும் தான் தினமும் பிடித்த உணவு சாப்பிடுவேன் என்றும் காலையில் ஜூஸ் மற்றும் மதியம் சூப் மட்டுமே குடிப்பேன் எனக்கூறி ஆச்சர்யப்பட வைக்கிறார்.


Click it and Unblock the Notifications











