Jai Marriage: 'எனக்கு நிச்சயம் காதல் திருமணம் தான். ஆனால்...' மனம் திறந்த நடிகர் ஜெய்!

சென்னை: தான் விரும்புகிற மாதிரியான ஆள் கிடைத்தால் நிச்சயம் காதல் திருமணம் செய்து கொள்வேன் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்குபவர் ஜெய். ராஜா ராணி உள்பட இவர் நடித்த நிறைய படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

நடிகை அஞ்சலியும், ஜெய்யும் காதலிப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தான் நடிக்கும் படத்தின் விழாக்களுக்கு கூட ஜெய் வராமல் இருந்ததால், இதுகுறித்து அவரிடம் கேட்க முடியாமல் இருந்தது.

இந்நிலையில் நடிகர் ஜெய் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காதல், திருமணம், கிசுகிசு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அவரது பேட்டி வருமாறு:

நீங்கள் ஏன் உங்கள் பட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை?

நீங்கள் ஏன் உங்கள் பட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை?

எனக்கு மேடை பயம் ,கூச்சம் அதிகம். ஏதாவது தப்பா பேசி விடுவேனோ என்கிற பயம் உண்டு. அதனால் தவிர்த்து விடுவேன். ஆனால் இதை யாரும் இப்படி நினைக்க மாட்டார்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள். வளர்கிறபோது இதற்கெல்லாம் இடம் தரக்கூடாது என்று அறிவுரை கூறினார்கள் அதனால் இன்று இங்கே வந்தேன். இப்போது வரும் முன்பு கூட மைக் எல்லாம் இருக்குமா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

இப்போது நடித்து வரும் படங்கள்?

இப்போது நடித்து வரும் படங்கள்?

வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' ,'நீயா? -2,', இவை வெளியாகத் தயாராக இருக்கின்றன .மம்முட்டி சாருடன் ஒரு மலையாளப் படம், 'போக்கிரி ராஜா 1', கோபி நயினார் இயக்கும் புதிய படம் , ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் படம் என படங்கள் உள்ளன.

'பார்ட்டி' அனுபவம் எப்படி ?

'பார்ட்டி' அனுபவம் எப்படி ?

பார்ட்டியில் செமி வில்லன் ரோல் .வெங்கட் பிரபு கூப்பிடும் போது சீரியசான ரோல் என்று கூப்பிட்டார். படப்பிடிப்பின் போது காமெடி போலாகிவிட்டது. இதில் எனக்கு ஒரு டீம் இருக்கும் அதில் ரெஜினா, சஞ்சிதா இருப்பார்கள். வெங்கட் பிரபு படம் என்றாலே அது எங்கள் படம். அந்தப்படம் ஒரு டீம் ஒர்க் என்று உணர வைக்கும்.

நீயா 2 -வில் பாம்பை விட உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?

நீயா 2 -வில் பாம்பை விட உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?

பாம்புக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும் தான். அது ஒரு தனி அடுக்கு போல் இருக்கும். எனக்கு உரிய முக்கியத்துவமும் இருக்கும். எனக்கு ப்ளாஷ்பேக் எல்லாம் வரும். அந்தளவுக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரம் தான்.

மலையாளத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி ?

மலையாளத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி ?

அது மலையாளப் படம் தான் என்றாலும் எனக்குத் தமிழ்ப்படம் போலத்தான். நான் தமிழில் தான் பேசி நடிக்கிறேன். மம்முட்டி சாரும் நானும் அதில் மதுரையிலிருந்து கேரளா செல்லும் பாத்திரங்களில் நடிக்கிறோம். படத்தில் நான் அவரது தம்பியாக நடிக்கிறேன். லோக்கல் தமிழ் பேசுவேன்.இருந்தாலும் மலையாளத் திரையுலகம் நம்மிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. அவர்கள் வேலை பார்க்கும் முறை வேறு மாதிரியாக இருக்கிறது.

'பகவதி'யில் விஜய் சாருடன் தம்பியாக நடித்தது போல சில கால இடைவெளிக்குப் பின் மம்முட்டி சாருக்குத் தம்பியாக மலையாளப் படத்தில் நடிக்கிறேன். இடையில் காலம் மட்டுமல்ல நானும் மாறியிருக்கிறேன்.

தனி கதாநாயகனாக நடிக்க ஏன் அதிகம் விரும்பவில்லை?

தனி கதாநாயகனாக நடிக்க ஏன் அதிகம் விரும்பவில்லை?

பாலிவுட்டில் பல நடிகர்கள் இணைந்து நடிப்பது சகஜம். அது பட வெற்றிக்கு உதவும் என்றே இணைகிறார்கள். 'சென்னை 28 'முதலே இப்படி டீமாக இணைவது வெற்றி பெறுவது நடந்து வருகிறது. அப்போது யாரையும் முதன்மைப்படுத்தாமல் பட வெற்றி என்பதே எங்கள் மனதில் இருக்கும்.'சுப்ரமணியபுரம் 'முதல் 'ராஜாராணி 'வரை இதே போக்கில் வெற்றியும் கிடைத்தது. அதே நேரத்தில் நான் தனியாகவும் வளர வேண்டும் உயர வேண்டும்.

'வாலு' பட வாய்ப்பைக் கூட நழுவ விட்டு விட்டீர்களே..?

'வாலு' பட வாய்ப்பைக் கூட நழுவ விட்டு விட்டீர்களே..?

அந்தக் கதையை இயக்குநர் என்னிடம் தான் சொல்லியிருந்தார். அவர் என் நண்பர் தான். சிம்புவிடம் சென்றால் அதே கதை வேறு ஒரு நிலைக்கு உயரும் என்று நினைத்தார். நானும் விட்டு விட்டேன்.

'ராஜா ராணி' போன்ற படங்களில் அடுத்து ஏன் நடிக்கவில்லை?

'ராஜா ராணி' போன்ற படங்களில் அடுத்து ஏன் நடிக்கவில்லை?

'வல்லினம் 'தான் என்னை ஆக்ஷன் பாதைக்கு மாற்றியது. அதன் பிறகு பல மாதிரியாகப் படங்கள் வந்தன.எல்லாப் படத்தின் போதும் இது தான் சிறந்தது என்று நினைத்து வேலை செய்கிறோம். அது எப்படியோ போய் முடிகிறது. இப்போதும் சுப்ரமணியபுரம் , எங்கேயும் எப்போதும் படங்கள் டிவியில் அடிக்கடி போடப்படுகின்றன. அப்போதெல்லாம் பலரும் கேட்பதுண்டு. நானும் இது பற்றி சசிகுமார் சாரிடம் கேட்ட துண்டு. உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று. அப்படிப்பட்ட வாய்ப்பு தானாக அமைய வேண்டும். காத்திருப்போம் என்றார். இப்போது என் கையில் உள்ள 5 படங்களும் இப்படி இப்போதும் நம்பிக்கையாகச் சொல்லும்படி எனக்குத் தோன்றுகின்றன.

கிசு கிசுக் களில் அதிகம் அடிபடும் நீங்கள் அது பற்றிக் கவலைப்படுவதுண்டா?

கிசு கிசுக் களில் அதிகம் அடிபடும் நீங்கள் அது பற்றிக் கவலைப்படுவதுண்டா?

ஆரம்பத்தில் ஒரு மாதிரியாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினர் நண்பர்கள் என்னைப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தேன். இப்போதெல்லாம் அது பற்றிக் கவலைப்படுவதில்லை.

காதல் கிசுகிசுக்களில் ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசப்பட்டீர்களே?

காதல் கிசுகிசுக்களில் ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசப்பட்டீர்களே?

அவர் தெலுங்கில் பிஸியாக இருக்கிறார். பார்த்துக் கூட நீண்ட நாட்கள் ஆகி விட்டன. ஆனால் வருகிற கிசுகிசு மட்டும் புதிராக இருக்கிறது.

உங்கள் திருமணம் காதல் திருமணமா? அல்லது ?

உங்கள் திருமணம் காதல் திருமணமா? அல்லது ?

எது என்று இப்போது வரை தெரியவில்லை. நான் விரும்புகிற மாதிரியான ஆள் கிடைத்தால் நிச்சயம் காதல் திருமணம் தான். அவர் நடிகையா வெளிநபரா என்பது தெரியாது. இல்லையேல் வீட்டில் சொல்பவர்களைத் திருமணம் செய்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X