இயக்குநருக்குத்தான் நன்றி சொல்லனும்… பெருமையாக உள்ளது…‘ஜெய் பீம்‘ ராவ் ரமேஷ் நெகிழ்ச்சி !
சென்னை : நடிகர் ராவ் ரமேஷ் என்றால் பலருக்கும் தெரியாது அதுவே ஜெய்பீம் திரைப்படத்தில் அட்டர்னி ஜெனரலாக நடித்தவர் என்றால், அடடே அவரா அட்டகாசமா நடிச்சு இருப்பாரே என்று பலரும் பாராட்டுவார்கள்.
ஜெய்பீம் திரைப்படத்தில் மணிகண்டன் லிமோ ஜோஸ் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு இவரின் கதாபாத்திரம் அழுத்தமாக நின்று பேசியது.
தெலுங்கு நடிகரான ராவ் ரமேஷ் கிட்டத்த 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லன் குணசித்திரம் என எந்த கதாபாத்திரத்திலும் மிரட்டும் ராவ் ரமேஷ். ஜெய் பீம் திரைப்படத்தில் அட்டர்னி ஜெனரலாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

ஜெய் பீம்
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'ஜெய் பீம்' படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் 'ஜெய் பீம்' படத்தைப் பாராட்டினாலும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இயக்குநருக்கு நன்றி
இத்திரைப்படத்தில் அட்டர்னி ஜெனரலாக நடித்திருந்த ராவ் ரமேஷ் இந்த கதாபாத்திரத்திற்கான என்னை தேர்வு செய்த இயக்குனருக்கு நன்றி என்று கூறினார். மேலும், ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசிய ராவ் ரமேஷ், நான்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று என்னைக் கேட்டதில் எனக்கு ஆச்சரியமான சந்தோஷம். இயக்குனர் ஞானவேல் என்னைக் கேட்டதும், அதை சூர்யா ஒத்துக் கொண்டதும் மகிழ்ச்சியான விஷயம் என்றார்.

அனைவரும் பாராட்டுகிறார்கள்
ஜெய்பீம் திரைப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் வெளியானதால் அத்தனை மொழி பேசுபவர்களும் என்னை பாராட்டுவதை பார்க்கும் போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களே பாராட்டுவது போல உணர்கிறேன் என்றார்.

நான் வில்லன் இல்லை
ஜெய்பீம் திரைப்படத்தில் நான் சூர்யாவுக்கு எதிரானவரே தவிர வில்லன் இல்லை. படத்தில் உண்மையில் பொறுப்புள்ள அதிகாரி. ஒரு பொறுப்புள்ள அதிகாரி எப்படி நடந்து கொள்வாரோ அப்படித்தான் நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். படம் பார்த்த அனைவருமே என் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குனருக்கு தான் அத்தனைப் பாராட்டுகளும் போய்ச் சேர வேண்டும் என்று நெகிழ்ந்து கூறினார் ராவ் ரமேஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











