இதுதாங்க ஜெய்பீம் எஸ்ஐ குருமூர்த்தியின் ரியல் குடும்பம்.. மனைவி மக்களுடன் பேட்டி கொடுத்த தமிழ்!
சென்னை: சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் கொடூர போலீஸ் அதிகாரி எஸ்ஐ குருமூர்த்தியாக வாழ்ந்திருந்த இயக்குநர் தமிழை படம் பார்த்த அனைத்து ரசிகர்களும் திட்டித் தீர்த்தனர்.
Recommended Video
ராஜாக்கண்ணுவாக நடித்த மணிகண்டனை குருமூர்த்தி லாக்கப்பில் அடித்தே கொன்ற காட்சிகள் ரசிகர்களை பதபதைக்க வைத்த நிலையில், அவரை நேரில் பார்த்தால் அடித்தே விடுவோம் என ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் அத்தனை தத்ரூபமாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் தமிழ் தனது குடும்பத்தாருடன் அளித்த பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

வெற்றி முழக்கம்
ஜெய்பீம் என பெயரிலேயே வெற்றி முழக்கத்தை வைத்துக் கொண்டு உருவான படம் வெற்றி பெறாமலா இருக்கும். உலக அளவில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு தனி அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டப்படி படிக்கும் மாணவர்களுக்கே இந்த படம் ஒரு பாடமாக அமைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

எஸ்.ஐ குருமூர்த்தி
ஜெய்பீம் படத்தில் எஸ்ஐ குருமூர்த்தி கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகப்பட்ட வசைகளை வாங்கிக் கட்டிக் கொண்டு வரும் இயக்குநர் தமிழ் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் பேட்டி எடுத்துள்ளது.

டானாக்காரன் இயக்குநர்
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் டானாக்காரன் படத்தை இயக்கி வரும் இயக்குநர் தமிழ் தான் ஜெய்பீம் படத்தில் முரட்டுத் தனமான சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியாக நடித்து இருந்தார். நடித்தார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.

குருமூர்த்தி குடும்பம்
இயக்குநர் தமிழை ஜெய்பீம் திரைப்படத்திற்கு பிறகு மக்கள் எஸ்.ஐ. குருமூர்த்தியாகவே பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஒரிஜினல் குடும்பத்தை நேரில் சந்தித்து எடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. இயக்குநர் தமிழின் மனைவி சகுந்தலா, மகள் செங்கொடி மற்றும் மகன் பிரபாகரன் என அவருக்கும் ஒரு அழகான குடும்பம் உள்ளது.
அதுவெறும் படம்
நிஜ கதையை அடிப்படையாகக் கொண்டு புனைவாக எடுக்கப்பட்டது தான் ஜெய்பீம் திரைப்படம். அதனை ஒரு டாக்குமென்ட்ரியாகவே நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. அது ஒரு புறம் இருக்க எஸ்.ஐ. குருமூர்த்தியாக நடித்த இயக்குநர் தமிழை கெட்ட வார்த்தைகளால் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அது ஒரு படம் அவ்வளவு தான் என இயக்குநர் தமிழ் அழகாக கூறியுள்ள வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











