ஜன நாயகன் சென்சார்.. எல்லாமே கம்பி கட்ற கதை.. தயாரிப்பாளர்களை பயமுறுத்துறாங்க.. பிரபலம் பகீர்!
சென்னை: முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 16ம் தேதி வெளியாகும், 24 கன்ஃபார்ம், 31ம் தேதி ரிலீஸ் ஆகுது, மகன் ஜேசன் சஞ்சய் உடன் மோதுகிறார் என்று சொல்வதெல்லாமே கம்பி கட்ற கதை தான் என தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்டு உடைத்துள்ளார்.
கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் ஜன நாயகன் படத்தின் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால், இதுவரை படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மேலும், ஜன நாயகன் திரைப்படம் சட்ட விரோதமாக லீக் ஆகி 1.2 கோடி பேர் பார்த்து விட்ட நிலையிலும், இன்னமும் படம் ரிலீஸ் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அமைதியோ அமைதி: ஜன நாயகன் படத்துக்கு ஏன் சென்சார் சர்டிபிகேட் தரவில்லை என்று தயாரிப்பு நிறுவனமோ படத்தில் நடித்த படக்குழுவோ, அந்த படத்தை இயக்கிய இயக்குநரோ இதுவரை யாருமே உண்மையான காரணத்தைக் கூறாமல் அமைதியோ அமைதி என அமைதி காத்து வருகின்றனர். ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழே கிடைக்கவில்லை என்றாலும், நேரடியாக ஓடிடியிலாவது வெளியிட்டு இருக்கலாமே என்றால் அதற்கும் மயான அமைதியே நிலவுகிறது.

மற்ற தயாரிப்பாளர்களை பயமுறுத்த: கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படித்தான் ஜன நாயகன் படம் வெளியாகப் போகிறது என வதந்திகளை சிலர் கிளப்பி விட்டனர் என்றும் இந்த மாதமும் ஜன நாயகன் படம் வெளியாக போகிறது. ஏ சான்றிதழ் கொடுத்து விட்டனர் என்றும் சிலர் கம்பி கட்ற கதையை கட்றாங்க. ஏற்கனவே சென்சார் போர்டு படத்தை பார்த்து விட்டனர். அவர்கள் ஏன் சான்றிதழ் தரவில்லை என்கிற கேள்வியையும் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கேட்டு விட்டோம். ஆனால், அதற்கும் பதில் இல்லை. தயாரிப்பு நிறுவனமும் எதுவும் சொல்லவில்லை. ஜூலை 17 மற்றும் 24ம் தேதி படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கும் தயாரிப்பாளர்களை எல்லாம் பொய்யான செய்தியை பரப்பி பயமுறுத்துகின்றனர் என தனஞ்செயன் பொங்கி எழுந்துள்ளார்.

சுதா கொங்கரா பண்ணது தப்பு: மேலும், பராசக்தி படத்துக்கு எதிராகவும் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்து இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் இதயம் முரளி படம் வெளியாவதற்கு எதிராக சுதா கொங்கரா செய்தது மிகப்பெரிய தவறு என்றும் தனஞ்செயன் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications