அரசியலில் விஜய்க்கு இந்த 4 பேர்தான் போட்டியே.. ஹெச். வினோத் சொல்லும் அந்த 4 பேரை சமாளிப்பாரா விஜய்?
சென்னை: 2026 ஆம் ஆண்டு தொடங்கி 10 நாட்களுக்குள்ளாகவே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய படம் ரிலீஸ் ஆகவுள்ளது, அது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27ஆம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படி இருக்கும்போது, நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து ஜன நாயகன் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். கட்சியின் முதல் மாநாட்டில் இருந்து அவர் சொல்லி வருவது, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டியே, ஒன்று திமுக மற்றொன்று தவெக. அதை தனது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் சொல்லி வருகிறார் விஜய்.

அரசியல் சவால்: இப்படி இருக்கையில் ஜன நாயகன் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் விஜயின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, " விஜய் அரசியலுக்கு வரலைன்னா தான் எனக்கு ஆச்சரியம் . அரசியல்ல நான் 4 வகை மனிதர்களை பார்க்கிறேன், ஒன்று புத்திசாலிகள், இரண்டு முட்டாள்கள், மூன்று புத்திசாலி மோசடிக்காரர்கள், நான்கு முட்டாள் மோசடிக்காரர்கள். இந்த நான்கு வகையான மனிதர்களையும் பேரையும் விஜய் ஈஸியா ஹாண்டில் பண்ணிட்டார்னா, அரசியல்ல ஜெயிப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை" என்று தெரிவித்துள்ளார். ஜன நாயகன் படத்தின் புரோமோசனுக்காக விகடனுக்கு அளித்த பேட்டியில் ஹெச் வினோத் இது போல பேசி உள்ளார்.

விஜய் ரசிகர்கள் : இவரது இந்த கருத்து தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களும் இந்த கருத்து தொடர்பான பதிவை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். இசை வெளியீட்டு விழாவில் ஹெச். வினோத் பேசும்போது கூட, மிகவும் தைரியமாக, இது ரீமேக் படம், கொஞ்சம் முன்ன பின்ன அப்படி இப்படி இருக்கும். அதனால ஈஸியா உள்ள புகுந்து அடிச்சிடலாம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான், ஐயா இது தளபதி படம், அவ்வளவுதான்" என்று பேசி மொத்த அரங்கையும் அலற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











