சோறு போட்டது சன்டிவி தான்.. திமுக பத்தி தப்பா பேசல.. இனிமே நடிக்க வாய்ப்பு வராது.. அருண் பேட்டி!

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் வலியுறுத்தி வந்தவர் நடிகர் அருண். தற்போது அவர் Cinema Express யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் தளபதி ரசிகன் மட்டுமில்ல தளபதி வெறியன் என கூறியுள்ளார்.

நடிகர் அருணின் பேட்டியில், கரூரில் நடந்த சம்பவத்திற்கும் ஒரு நாள் நீதி கிடைக்க வேண்டும். கெட்ட கர்மா நல்ல கர்மாவாக மாற வேண்டிய நேரம் இது. கடவுள் நம்ம பக்கம் இருக்கார், கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்று பலரும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஜனநாயகன் திரைப்படம் குறித்து நடிகர் அருண், இந்த படத்தில் நான் நடித்திருப்பதே எனக்கு மிகப்பெரிய பெருமை. என் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

Vijay CM Jana nayagan Arun
Photo Credit:

நடிகர் அருண்: விஜய் அண்ணனுடன் நடித்த அனுபவம் எனக்கு கிளவுட் நைன் அல்ல, கிளவுட் 2029 மாதிரி இருந்தது. படத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வரைக்கும் என்னுடைய கதாபாத்திரம் வருகிறது. அது எனக்கு ஒரு பெரிய பிரேக். ஜனநாயகன் திரைப்படத்திற்கு தொடர்ந்து பல தடைகள் வந்துகொண்டே இருந்தன. சாதாரணமாக வெளியாக வேண்டிய ஒரு படம், இப்போது திருவிழாவைப் போல வெளியாக உள்ளது. டைட்டில் கார்டில் 'முதலமைச்சர் ஜோசப் விஜய்' என்று வரப்போகிறது என்பதை நினைத்தாலே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

சோறு போட்டது சன்டிவி தான்: தொடர்ந்து பேசிய அருண், அரசியல் மற்றும் தனது தனிப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய அருண், நான் கட்சியில் இணைந்தபோது பல விமர்சனங்கள் வந்தன. என் நலன் விரும்பிகள் கூட 'இதெல்லாம் எதற்கு?' என்று கேட்டார்கள். ஆனால் எனக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் இருந்தது. அதைத் தான் நான் என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தினேன். அதே நேரத்தில், சன் டிவி எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த நிறுவனம். இந்த வாழ்க்கையை கொடுத்ததே சன் டிவிதான். அவர்கள் எனக்கு சோறு போட்டு இருக்கிறார்கள். அதனால் திமுக குறித்து நான் ஒருபோதும் காரசாரமாக பேசவில்லை. நாகரிகமாக சில கருத்துகளை மட்டும் முன்வைத்தேன். இனிமேல் நான் சன் டிவியில் தொடர முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அவர்களும் இனி எனக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என அருண் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X