Jana Nayagan: எங்கள காப்பாத்த யாரும் வரமாட்டீங்க.. ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் வேதனை!
சென்னை: விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் எப்படியும் பிப்ரவரி மாதமே திரைக்கு வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் கூட படம் ரிலீஸாகாது என்ற தகவல் வந்து கொண்டு இருப்பதால் ரசிகர்கள் மன வேதனையில் உள்ளனர். இந்த மன வேதனையை படத்தின் இயக்குநர் எங்களை காப்பாத்த யாரும் வரமாட்டாங்க என புலம்பி உள்ளார்..
தமிழக வெற்றிக்கழகம் என அரசியல் கட்சியை தொடங்கி உள்ள தளபதி விஜய், வர விருக்கும்
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி, தன்னை வளர்த்து விட்ட சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். ஹெச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கடைசி திரைப்படம் தான் ஜனநாயகன். ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் சிக்கல் ஏற்பட்டதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
ஜனநாயகன் பிரச்சனை: நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தணிக்கை குழு சான்றிதழ் கிடைத்ததும் படத்தை பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஏப்ரல் 30ந் தேதி ஜனநாயகன் பட வெளியாக வாய்ப்பில்லை என கனடாவில் படத்தை வெளியிடும் York Cinemas விநியோக நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

காப்பாத்த யாரும் இல்லை: இந்நிலையில், சசிகுமார் நடித்த 'மை லார்ட்' படத்தை பார்த்த எச் வினோத். பல ஆயிரம் வருஷமா பேசக்கூடிய அரசியல் இருக்கிறது. இந்த படத்திற்கு முத்து சிற்பி (சசிகுமார்) நிறைய அரசியல் பேசியிருக்கிறார். அவர் நிறைய குத்து வாங்கும், தமிழ் மூத்த பத்திரிக்கையாளர்கள் வந்து அவரை காப்பாற்றுகிறார்கள். பலர் இந்த படத்திற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள். ஆனால், அதை நான் பேசினால் காப்பாற்றுவதற்கு யாரும் வர மாட்டீங் என வேதனையுடன் பேசி உள்ளார்.
சசிகுமாரின் 'மை லார்ட்': ஜோக்கர், குக்கூ படத்தை இயக்கிய ராஜூ மோகன் இயக்கத்தில் 13ந் தேதி வெளியான திரைப்படம் 'மை லார்ட்', சசிகுமார் நடித்த இந்த படத்தில் சமுதாயத்தில் பலரும் சொல்ல தயங்கிய கிட்டி திருட்டுபற்றியும், மருத்துவமனையில் சாதாரண மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் அழுத்தமாக பேசி உள்ளார். இந்த படம் தியேட்டரில் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











