வைரல் ஜானகி டீச்சருக்கு பின்னால் இருக்கும் மேஜிக்கே இவர்தான்.. அபிஷேக் குமார் கலகல பேட்டி!
சென்னை: சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஜானகி மிஸ் எனும் அனிமேஷன் டீச்சர் வைரலான நிலையில், அதை உருவாக்கிய அபிஷேக் குமாரின் சிறப்பு பேட்டி வெளியாகி இருக்கிறது.
ஆபாச வார்த்தைகளாலோ, யாரையும் நேரடியாக தாக்காமலோ, சமூக பிரச்சனைகளுக்கு ரியாக்ஷன் கொடுக்கும் அனிமேஷன் டீச்சராக ஜானகி டீச்சரை ஸ்டாண்ட் அப் காமெடியனான அபிஷேக் உருவாக்கி உள்ளார்.

வி.ஐ.டி. கல்லூரியில் படித்த இவர், கல்லூரி கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சியில் டிராமாவில் கலந்து கொண்டதில், அதன் மீது அவருக்கு அதிகளவில் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியை விட்டு வெளியே வந்த போதும், தன்னால் டிராமாவை விட முடியாத சூழல் உருவானாதால், கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு டிராமா கம்பெனியில் போய் சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அங்கே ஒரு சூழலில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறினேன், இப்போ வரைக்கும் அதுவே தொடருது. நடிகனாக வேண்டும் என்ற ஆசையும் இருக்கு என்றார்.
பத்தாவது எக்ஸாம்ல ஆல் பாஸ் என்கிற அறிவிப்பு வந்ததும், சொந்தக்காரப் பெண் ஒருத்தி போன் பண்ணி ரொம்ப கலாச்சிட்டா, அவங்க பேசுனது தான் ஜானகி டீச்சர் உருவாக காரணமே என ஜானகி டீச்சரின் ஆல் ஹிஸ்டரியையும் அபிஷேக் பேசும் இந்த அட்டகாச வீடியோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications











