நான் கர்ப்பமா இருக்கேனா? கர்மா உங்களை சும்மா விடாது.. பாடகி கெனிஷா பேட்டி!

சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவி உடனான திருமண உறவை முறித்துக்கொண்டதற்கு பாடகி கெனிஷாவுடனான நட்புதான் காரணம் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரவி மோகன், கெனிஷா இருவரும் ஐசரி கணேஷ் அவர்களின் திருமணத்தில் ஜோடியாக வந்து இருந்தது பெரும் புயலை கிளப்பியது. இதுகுறித்து பாடகி கெனிஷா Behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் பிறந்தது பெங்களூரில் தான், அதன் பிறகு கனடா சென்று விட்டேன். யூ.கே.வில் கல்லூரி படித்தேன் அதன் பிறகு இசைக்கல்லூரியில் படித்துவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பி வந்தேன். அதன்பிறகு, தொலைக்காட்சி ஒன்றில் இசையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் ஐந்தில் வந்தேன். அது எனக்கு மிகவும் பெருமையாகவே இருந்தது. எனக்கு பாடுவது, நடனம், ஆடுவது எல்லாம் வயிற்றில் இருந்தபோது வந்தது என நினைக்கிறேன். என் அம்மா ஒரு பாடகி என்பதால், நான்கு வயது குழந்தையாக இருக்கும் போதே, சர்ச்சில் பாடி இருக்கிறேன். என் அம்மாவிற்கு 17 வயதிலேயே திருமணமாகி விட்டது. அவர்களின் ஒரே ஒரு குழந்தை நான் என்பதால், நான் என்ன சொல்கிறேனோ அவர்கள் கேட்பார்கள். அம்மா என்னுடைய 17வது வயதில் இறந்துவிட்டார்கள். அதன் பின் அப்பாவும் இறந்துவிட்டார்.

Jayam ravi kenishaa aarthi
Photo Credit:

கர்மா சும்மா விடாது: இதனால் பல கஷ்டத்தை வாழ்க்கையில் நான் பார்த்து இருக்கிறேன். எப்போதும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், பெற்றோர் இறந்த பிறகு சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டேன். இதனால், காலையில் இருந்து வரை பல இடத்தில் வேலை பார்த்து இருக்கிறேன். நான் முதன் முதலில் ஒரு காபி ஷாப்பில் 500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். அது தான் நான் வாங்கிய முதல் சம்பளம். இப்படி படிப்படியாகத்தான் நான் இந்த இடத்தை அடைந்தேன். ஆனால், பலர் என் வளர்ப்பு குறித்து மோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் தான், உன் பெற்றோர் இறந்துவிட்டார்கள், இப்படி பட்ட பெண்ணை பெற்றதால் தான் இறந்துவிட்டார்கள் என்று பதிவிடுகிறார்கள். என்ன வேணாலும் பேசுங்க உங்களுக்கு பேசறதுக்கு வாய் இருக்குன்னு பேசுறீங்க. ஆனா, கேக்குறதுக்கு எனக்கு காது இல்லை. என்னுடைய அம்மா அப்பா பத்தி நீங்க பேசினா நாளைக்கு அதுவே உங்களுக்கு நடக்கும் இந்த விஷயத்தை மனசுல வச்சுக்கிட்டு எப்பவுமே மத்தவங்கள பத்தி பேசும்போது யோசித்து பேசுங்க.

நான் கர்ப்பமா: அதுமட்டுமில்லாமல் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கருத்துக்களை காமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவிடுகிறார். இது தான் கர்ப்பமாக இருக்கும் வயிறா... நான் கர்ப்பம் இல்லை... எனக்கு அழகான சிக்ஸ் பேக் தான் இருக்கிறது. யார் யார் என்னென்ன பேசினாலும், அது கர்மாவாக அவர்களுக்கே திரும்பி வரும். ரவி மோகன் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கிறது. எது உண்மை எது பொய் என்பது கூடிய விரைவில் தெரியவரும். அதுவரைக்கும் அனைவரும் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருங்கள், என்னையும் அமைதியாக இருக்க விடுங்க என்றார். தொடர்ந்து பேசிய, கெனிஷா அன்றும் இன்றும் என்கிற என்றுடைய ஆல்பம் பாடல் ஜூன் 15ந் தேதி பாடல் வெளியாக உள்ளது. அதற்கு உங்களின் ஆதரவு தாருங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X