ஜெயம் ரவி Exclusive: சோஷியல் மீடியாவில் குவியும் கமெண்ட்ஸ்.. வெளிப்படையாக பேசிய 'பிரதர்’ பட ஹீரோ!

சென்னை: வரும் தீபாவளிக்கு ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ரவி அன்று முதல் இன்று வரை ஜெயம் ரவியாகவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். சாக்லேட் பாயாகவும், ரொமான்டிக் ஹீரோவாகவும் நடித்து வந்த ஜெயம் ரவி ஆக்‌ஷன், பீரியட், காமெடி என அனைத்து விதமான படங்களையும் ரசிகர்களுக்கு கொடுத்து தனக்கான ஒரு இடத்தில் எப்போதும் போல ஹேப்பியாக உள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி பற்றி பெரிதாக கிசுகிசுக்கள் குவியாத நிலையில், திடீரென அவர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது சினிமா துறையினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

jayam ravi brother diwali 2024

பாடகியுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாகவும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியான நிலையில், பிலிமிபீட் தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த முதல் படமே தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் தான். தொடர்ந்து அவர் நடித்த உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் என பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்கள் தான். ஆரம்பத்தில் தன்னை பலரும் ரீமேக் ஹீரோன்னு கலாய்த்தார்கள். ஒரு படத்தை ரீமேக் செய்து நடிப்பது என்பது ரொம்பவே சவாலான விஷயம். ஆனால், பலருக்கும் அது புரியவில்லை. அதன் பின்னர், தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ராம்சரண் ரீமேக் செய்து நடிக்கும் போது தான் அந்த பட்டம் என்னை விட்டது சென்றது. தொடர்ந்து ரீமேக் படங்களை தவிர்த்து புதிய இயக்குநர்களுடன் கதைகளை கேட்டு நடித்து வருகிறேன் என்றார்.

சோஷியல் மீடியா கமெண்ட்ஸ்: ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் சமீப காலமாக சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயம் ரவி முன்பெல்லாம் ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையில் மீடியா இருந்தது. ஆனால், இப்போ அதெல்லாம் அடுத்த கட்டம் தான். சோஷியல் மீடியா மூலமாக நேரடியாக ரசிகர் என்ன சொல்ல விரும்புகிறாரோ சொல்கிறார். நடிகர்கள் பாராட்டாக இருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும், திட்டாக இருந்தாலும் கேட்கலாம். மாற்ற வேண்டும் என்றால் மாற்றிக் கொள்ளலாம். இல்லையென்றால் கடந்து செல்லலாம். ஆனால், ரசிகர்களின் நேரடி பாராட்டுக்கள் நிச்சயம் நடிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். அது டிக்கெட்டாக மாறவில்லை என்றால் கூட பரவாயில்லை என பளிச்சென பதில் அளித்துள்ளார்.

பிரதர் படத்தின் கதை: ராஜேஷ். எம் இயக்கத்தில் தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ள ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படம் முழுக்கவே அக்கா பூமிகாவுக்கும் தம்பி ஜெயம் ரவிக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் கதை என்பதை ஜெயம் ரவி ரிவீல் செய்துள்ளார். சொந்த அக்காவை நினைத்துக் கொண்டு தான் பூமிகா மேடம் உடன் படத்தில் நடித்தேன் என்றும் ஜெயம் ரவி கூறியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், 5 படங்கள் அவர் கைவசம் இருப்பதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X