twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிக்காகோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு.. கண்ணதாசன் உடலை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் - ஜெயந்தி கண்ணப்பன்!

    |

    சென்னை: கவிஞர் கண்ணதாசன் 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இயற்கை எய்தினார்.

    அவரது பூத உடலை எப்படியாவது தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என எம்.ஜி.ஆர் செய்த அரும்பாடுகளை அப்படியே நினைவு கூர்ந்துள்ளார் ரீவைண்டு ராஜா நிகழ்ச்சியில் ஜெயந்தி கண்ணப்பன்.

    சமீபத்தில் கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த பேட்டி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    Jayanthi Kannappan remembered how MGR helping Kannadasan body to came Tamil Nadu

    ஏற்கனவே ஏகப்பட்ட பேட்டிகளை நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள ஜெயந்தி கண்ணப்பன், இப்போ ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில், கவிஞர் கண்ணதாசன் எப்படி கோமாவிற்கு போனார். அவருக்கு அமெரிக்காவில் என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. எந்த இடத்தில் தவறு நடந்து, அவர் உயிரிழக்க நேர்ந்தது என எல்லா விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக அழகிய தமிழில் எடுத்து உரைக்கும் இந்த வீடியோவை மறக்காமல் பார்த்து விடுங்கள்.

    அய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான ரசிகர்கள்!அய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான ரசிகர்கள்!

    புகைப்பழக்கத்தின் காரணமாக கவிஞர் கண்ணதாசனின் உணவுக் குழாய் சுருங்கி போனது அறியாமல் அமெரிக்க மருத்துவர்கள் வழக்கமாக செய்யும் சிகிச்சையை மேற்கொண்டதன் காரணத்தால் தான் 54 வயதிலேயே அப்படியொரு அரும்பெரும் கவிஞரை நாம் இழக்க நேரிட்டது எனும் அரிய தகவல்களையும் ஜெயந்தி கண்ணப்பன் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஜவஹர்லால் நேரு, தனது உடல் எரியூட்டப்பட்ட பின்னர், அதன் சாம்பல், நாட்டில் உள்ள அத்தனை வயல் வெளிகளிலும் தெளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதை போலவே, கவிஞர் கண்ணதாசனின் உடலும் தமிழகத்திற்குத் தான் என எண்ணிய எம்.ஜி.ஆர் அரசு செலவில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து, கண்ணதாசனின் உடலை அப்பவே எம்ஃபார்மிங் எல்லாம் பண்ணி அழகாக தமிழக மக்களுக்கு அஞ்சலி செலுத்த கொண்டு வந்தார் என்பதையும் விளக்கி உள்ளார்.

    English summary
    Jayanthi Kannappan remembered how MGR helped for to get Kannadasan dead body to Tamil Nadu on that period in a recent Rewind Raja interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X