ஜெயராம் குடும்பத்தில் இப்படி ஒரு ரகசியம் இருக்கா? பொத்தி பொத்தி வைத்ததை இப்படி ஓபன் பண்ணிட்டாரே!
சென்னை: நடிகர் ஜெயராம் தனது திரைவாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டவர். தோல்விகள் அவரை தளர விடவில்லை. சினிமா வெற்றிகள், தோல்விகள் அவரது குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. தனது குடும்பம் குறித்து அடிக்கடி பேசும் இவர், அண்மை பேட்டியில் அவரது குடும்பம் குறித்தும் பற்றிப் பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதை நிறுத்தியது குறித்து ஜெயராம் கூறினார். ரெட் எஃப்.எம். மலையாளத்திற்கு அளித்த பேட்டியில், "'என்டே வீடு அப்புவின்டேயும்' படத்திற்குப் பிறகு, கண்ணன் (காளிதாஸ்) அழைப்புகள் பெற்றார். படிப்பு முடிந்தபின் நடிப்பு போதும் என்பது அவனது தாயார் அஸ்வதியின் (பார்வதி) முடிவு," என்று ஜெயராம் தெரிவித்தார்.

படிப்பு முடிந்ததும் காளிதாஸ் தமிழில் அறிமுகமாகி, 'பூமரம்' மலையாளப் படத்தில் நடித்தார். "வீட்டில் சினிமா பேச்சுகள் இல்லை. படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால் நகைச்சுவைகள் தான் இருக்கும். என் குழந்தைகளில், மகள் சக்கி தான் நன்றாக மிமிக்ரி செய்வாள், ஆனால் பொதுவெளியில் செய்ய மாட்டாள்," என ஜெயராம் குறிப்பிட்டார்.
குழந்தைகள் நண்பர்களாக: "குழந்தைகள் நம் நண்பர்களாக இருக்க வேண்டும். அப்படியே அவர் (பார்வதி) வளர்த்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. என் இரண்டு குழந்தைகளும் எதைப்பற்றியும் முதலில் அம்மாவிடம்தான் சொல்வார்கள். அதன்பிறகுதான் என்னிடம். அதைக்கூட சொல்ல முடியாத போது தான் நண்பர்களிடம் மனம் திறந்து பேசுவார்கள்," என ஜெயராம் பகிர்ந்தார்.
ஆஷா சரத்: நடிகை ஆஷா சரத், காளிதாஸ் ஜெயராம் நல்ல மனிதர்; அனைவரிடமும் மரியாதையுடன் பழகுபவர் என்றார். கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த காளிதாஸ், வசனங்களைப் புரிந்து கொண்டு அழகாக நடித்தார்; பல காட்சிகளில் தன்னை கண்கலங்க வைப்பதாகத் தெரிவித்தார். ஜெயராம் -காளிதாஸ் தந்தை-மகன் உறவு திரையிலும் நிஜத்திலும் அருமையாக இருந்தது என்றார்.

ஆசைகள் ஆயிரம்: நடிகர்கள் ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் , ஆஷா சரத் நடித்துள்ள 'ஆசைகள் ஆயிரம்' திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு, ஜெயராமும் காளிதாஸும் இணைந்து நடிக்கும் படம் இது. இந்நிலையில் அவரது மகன் மற்றும் மகள் குறித்து ஜெயராம் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக மலையாள ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











