அண்ணன் இறந்த சில மணி நேரத்தில் ஷூட்டிங்.. உள்ளுக்குள் அழுது வெளியே சிரித்த ஊர்வசி..நெகிழ்ந்த ஜெயராம்

சென்னை: பாண்டியராஜ் இயக்கத்தில் ஊர்வசி, ஜெயராம், மிஷ்கின், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன், ஆனந்திகா, சிங்கம் புலி ஆகியோர் நடித்து இருக்கும் திரைப்படம் 'பரிமளா அண்ட் கோ'. Lyca Productions சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜி தமிழ்குமரன் தயாரித்துள்ள இப்படம் மே 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜெயராம் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு மனதை உருக்கும் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

பர்மிளா அண்ட் கோ: அதில், ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன், அது இந்த நேரத்தில் சொல்லலாமா வேண்டாமா என்று எனக்கு தெரியலை. ஆனாலும், சொல்கிறேன். இந்த படத்தில் பாலக்காட்டில் நடப்பது போல ஒரு சீன் ப்ளான் பண்ணி இருந்தோம். அந்த காட்சியில் அனைத்து நடிகர்களும் இருப்பார்கள். அந்த காட்சிக்காக லொக்கேஷனில் பர்மிஷன் வாங்கி அந்த ஷூட்டிங்கிற்கு நாலு நாட்களுக்கு மட்டுமே பர்மிஷன் கொடுத்து இருந்தார்கள். அந்த தேதியை மிஸ் பண்ணிட்டா பின், அந்த ஷூட்டிங் நடத்தவே முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால், நிறைய பிளான் பண்ணி அனைத்து நடிகர்களையும் அழைத்துக்கொண்டு பாலக்காட்டில் போய் இறங்கி, முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பித்து மதியம் தான் ஆச்சு. அந்த நேரத்தில் ஊர்வசியின் அண்ணன் இறந்துவிட்டார் என செய்தி வந்தது.

Urvashi Jayaram interview
Photo Credit:

ஊர்வசி பேச்சு: அந்த மாதிரியான நேரத்தில் ஊர்வசி நைட் ஃப்ளைட்டில் கோயம்புத்தூரில் டிக்கெட் போடுங்க, இங்கே இருப்பவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டே இருங்க என சொல்லிவிட்டு, சென்னைக்கு வந்து எல்லா சடங்குகளையும் முடிச்சு அடுத்த நாள் மதியம் மீண்டும் ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார்கள். அதுவும் அந்த சீன், மிகவும் ஹியூமரஸான சீன். அந்த சீனில் சிரிச்சி சிரிச்சி நடித்தாங்க. இது மிகப்பெரிய விஷயம் என ஜெயராம் ஊர்வசியை வெகுவாக பாராட்டி பேசினார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஊர்வசி, அந்த இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்திருந்தா, என்னால் அந்த நகைச்சுவை காட்சியில் நடித்தே இருக்க முடியாது. ஜெயராம் என்பதால், அந்த காட்சியில் எதை பற்றியும் யோசிக்காமல் என்னால் நடிக்க முடிந்தது. ஏன் என்னால், என்னைவிட ஜெயராமுக்கு என் அண்ணன் மிகவும் நெருங்கிய நண்பர். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயராம் அதைப் பற்றி ஒரு வாரத்துக்கும் கூட கேட்கவில்லை. அந்த சீன் பற்றி சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டே தான் இருந்தோம்.

Urvashi Jayaram interview
Photo Credit:

மோசமான சம்பவம்: ஒரு நிமிஷம் அண்ணனை பற்றி பேசி இருந்தால் கூட நான் அப்செட்டாகி இருப்பேன். அந்த காமெடி காட்சியில் என்னால் நடித்து இருக்கவே முடியாது. மற்றவர்களாக இருந்தால், என்ன ஆச்சு மேடம் என கேட்டு இருப்பார்கள். அதை ஜெயராமும் செய்யவில்லை, பாண்டியராஜும் செய்யவில்லை. இது எப்படிப்பட்ட விஷயம் என்பது கலைஞர்களுக்குத்தான் தெரியும் என ஊர்வசி பேசி உள்ளார். இதன் மூலம் ஒரு நடிகரின் தொழில்முறை அர்ப்பணிப்பு எவ்வளவு ஆழமானது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X