»   »  காதலில் கசிந்துருகும் ஜீவா ..

காதலில் கசிந்துருகும் ஜீவா ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேமராமேன்-இயக்குனர் ஜீவாவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாலே, மனசும், உடலும் லேசாகிப் போய் விடும். அவ்வளவு அற்புதமாகபேசுகிறார்.

நடுத்தர வயசுக்காரராக இருந்தாலும் இந்தக் காலப் பசங்களின் மன நிலையை அப்படியே புட்டுப் புட்டு வைக்கிறார். பிசியான கேமராமேன் ஜீவா.தமிழ் தவிர இந்தியிலும் ஜீவாவின் கேமரா படு பிசியாக சுழன்று கொண்டுள்ளது.

இதற்கு இடையே அவ்வப்போது இயக்குநராக அவதாரம் எடுப்பார் ஜீவா. 12 பி, உள்ளம் கேட்குமே என இரு படங்களை இயக்கிய ஜீவாஇப்போது உன்னாலே உன்னாலே என்ற படத்தை இயக்கி வருகிறார்.

முதல் இரு படங்களும் இளைஞர்களுக்கான படம். அதேபோல உன்னாலே உன்னாலே படமும் இளைஞர்களின் படம். அவர்களுக்கான அத்தனைஅம்சங்களும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம் இப்படத்தில்.

எப்படி என்பதை ஜீவாவே சொல்கிறார், கேளுங்கள் ...

நட்பிலிருந்துதான் காதல் பிறக்கிறது. நண்பர்களாக இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் கிடையாது. அங்கே நெகிழ்ச்சி உண்டு, நெருக்கம் உண்டு,உரிமை உண்டு, இறுக்கம் கிடையாது.

ஆனால் அதுவே காதலாக மாறும்போது, நட்பு ஓடிப் போய் விடுகிறது. இந்த இடத்தில்தான் எனது கதை ஆரம்பிக்கிறது.

ஆண்களுக்கு பார்த்தவுடனேயே காதல் தீ பற்றிக் கொண்டு விடும். தூங்க முடியாது, சாப்பிட முடியாது, ஏங்க மட்டும்தான் முடியும். அப்படி ஒருஅணல் பறக்கும். ஆனால் பெண்கள் விஷயத்தில் இது நேர்மாறாக இருக்கும்.

ஒரு ஆணை சந்திக்கும்போது அவன் எப்படிப்பட்டவன் என்பதை எடை போடுகிறாள், நமக்கும், இவனுக்கும் ஒரே அலைவரிசை இருக்கிறதா என்றுபார்க்கிறாள், ஒத்துப் போகுமா என்று யோசிக்கிறாள். அப்புறம்தான், ஒரு வேளை அவளும் காதலித்தால், தனது எண்ணத்தை வெளிப்படுத்துவாள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஒரே ஒற்றுமை காதல் மட்டும்தான். மற்றபடி இருவருமே வேறு வேறு டிராக்கில் பயணிக்கக் கூடியஆட்கள்தான்.

உன்னாலே உன்னாலே மிகவும் ரசித்துப் பார்க்கக் கூடிய வகையில் அருமையாக வந்திருக்கிறது. அனைவரும் என்ஜாய் பண்ணிப் படத்தைப்பார்ப்பார்கள். முன்னாள் இளைஞர்களும் இதை ரசிப்பார்கள், இந்நாள் இளைஞர்களும் விரும்புவார்கள்என்றார் ஜீவா.

சென்னையில் படம் ஆரம்பிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயருகின்றன. படத்தின் ஹீரோ வினய்.புதுமுகம். இருந்தாலும் பக்குவமாக நடித்துள்ளாராம்.

இரண்டு ஜோடிகள் ஒருவர் சதா, இன்னொரு தனிஷா. இவர் கஜோலின் தங்கச்சி என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லியுள்ளோம் (சதாவுக்கும்,இவருக்கும் செமையான கிளாமர் போட்டி என்பதையும் பலமுறை சொல்லியுள்ளோம்!)

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. ஜீன்ஸ் படத்தைப் போலவே இப்படத்திலும் ராஜு சுந்தரத்திற்கு காமடி கலந்த ஒரு கலக்கல்வேடத்தைக் கொடுத்திருக்கிறார் ஜீவா. முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக இதில் ராஜுசுந்தரம் வருகிறாராம்.

உங்களது படங்களில் ஒரு வெளிநாட்டுத்தனம் தெரிகிறதே?

அப்படியெல்லாம் இல்லை. எனது 12 பி படத்தின் நாயகன் ஒரு சாதாரண இளைஞன். பஸ்ஸில்தான் ஆபிஸுக்குப் போகிறான், வருகிறான். படத்தின்கதையமைப்பை சற்றே வித்தியாசப்படுத்தியிருந்தேன். அது வெளிநாட்டுக்கரத்தனம் போல தோன்றியிருக்கலாம்.

உள்ளம் கேட்குமே படத்தில் ஹீரோ ஷாம் மட்டுமே பணக்கார இளைஞன். காரிலேயே சுற்றிக் கொண்டிருக்க விரும்பும் இளைஞன். ஆனால்அவனைச் சுற்றியுள்ள மற்ற கேரக்டர்கள் எல்லாம் சாதாரண நடுத்தர குடும்பத்து ஜனங்கள்தான்.

காதலைத் தவிர வேறு சப்ஜெக்ட் மீது உங்களுக்கு காதல் இல்லையா?

நமக்கு கிடைத்த வாழ்க்கை அருமையானது, அரிதானது. சோகத்தை அடக்கிக் கொண்டு மூலையில் அமர்ந்து அழுவதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். முடிந்த வரை ஜாலியாக இரு, சந்தோஷமாக இரு. எனது படைப்பின் கேரக்டர்களும் இதைத்தான்பிரதிபலிப்பார்கள்.

இப்படி ஒட்டுமொத்தமாக சந்தோஷத்தைக் காண வேண்டுமானால், அனுபவிக்க வேண்டுமானால் அதற்கு காதலைத் தவிர வேறு என்ன உள்ளது,சொல்லுங்கள்?

வாஸ்தவம்தான் ஜீவா!

Read more about: chat with director jeeva

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil