»   »  ஜிலு ஜிலு ஜெனீலியா!

ஜிலு ஜிலு ஜெனீலியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரிஷாவுக்குக் கடும் போட்டியாக கலக்கி வரும் ஜிலு ஜிலு ஜெனீலியா ரீசன்ட்டாக நடித்த பொம்மரிலு பெத்தஓட்டம் ஓடியதில் சிரி சிரி ஜெனீலியாவாக மாறியுள்ளார்.

தமிழில் பாய்ஸ் மூலம் நடிப்பவதாரம் எடுத்த ஜெனீலியாவுக்கு (அப்ப ஹரிணி) தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புவரவில்லை. இதனால் தெலுங்குப் பக்கம் தாவினார். எதிர்பாராதவிதமாக அங்கு அதிர்ஷ்டம் அடை மழையாகப்பொழியவே அப்படியே கண்டினியூ செய்தார்.

தெலுங்கில் இப்போது ஜெனீலியா ரொம்பப் பிசியாம். சமீபத்தில் அவர் நடித்த பொம்மரிலு பிய்த்துக் கொண்டுஓடியதால் ஜெனீலியாவுக்கு ஏக டிமாண்ட் ஆகி விட்டதாம். கையில் இப்போது 3 படங்கள் உள்ளதாம்.

மறுபடியும் தமிழ்ப் பக்கம் வரவே மாட்டேளா என்று ஆதங்கமாக அவரிடம் கேட்டால், தெலுங்கில் 3 படங்களில்நடித்து வருகிறேன். தமிழில் இப்போதுதான் சென்னைக் காதலை முடித்தேன். தொடர்ந்து தெலுங்கில் படங்கள்இருப்பதால் அதை முடித்து விட்டுத்தான் தமிழ் பக்கம் வர முடியும்.

கவலையே படாதீங்க. கண்டிப்பாக இந்த ஆண்டில் ஒரு தமிழ்ப்படம் நிச்சயமா உண்டு. பேச்சு வார்த்தைநடக்கிறது என்று ஆறுதல் கூறுகிறார்.

ஜெனீலியாவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டிலுமே நடிப்பது படு ஜாலியாக இருக்கிறதாம். காரணம், இரண்டுமேஎனக்கு தெரியாத மொழிகள். இதனால் இரு மொழி உணர்வுகளையும் கொண்டு வந்து நடிப்பது சாலஞ்சிங்கானவேலை.

ஆனால் எனக்கு சவால்னா ரொம்பப் பிடிக்கும். ஸோ படு ஜாலியாக இந்த சவாலை ஏற்று அசத்தி வருகிறேன்.டயலாக் முழுவதையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு மணப்பாடம் செய்து விட்டுத்தான்ஸ்பாட்டுக்கேப் போவேன். ஸோ, நோ பிராப்ளம் என்கிறார் ஜெனீலியா.

ஆமா பெரிய ஹீரோக்களோடு ஜோடி சேர யோசிக்கிறீர்களாமே என்று அடுத்த கேள்விக்குத் தாவினோம்.அப்படியெல்லாம் இல்லை. நான் ரொம்ப சின்னப் பொண்ணு. இன்னும் பக்குவப் படலை. பெரியஹீரோக்களுடன் பெரிய பெரிய கேரக்டர்கள் செய்வதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அப்போது நிச்சயம்பெரிய தலைகளுடன் ஜோடி சேருவேன். அதுவரை ஜாலி ரோல்கள் மட்டும்தான் என்று கண் சிமிட்டுகிறார்.

தெலுங்கோடு தமிழிலும் அவ்வப்போது நடித்து இரு மொழிகளிலும் டாப்புக்குப் போக டாப் கியரில் இந்தஆண்டு செயல்படப் போகிறாராம் ஜெனீலியா. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு சினிமா, சினிமா, சினிமாமட்டும்தான். அப்புறம்தான் கல்யாணம் என்று சொல்கிறார் ஜெனீ.

ஜெனீ, ஒரு ஸ்வீட் ஹனி பேபி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil