»   »  ஜெனீபரின் ஹீரோயின் ஆசை கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனீபர் இப்போது ஜாம்பவான் படத்திலும் பிரஷாந்துக்கு தங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.இவர் ஒரு வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறாராம். கிழக்குக் கரை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாராம்.(அப்படி ஒரு படம் வந்ததாகவே ஞாபகம் இல்லையே).இதுவரை 25 படங்களில் குட்டி, துக்கடா வேடங்களில் நடித்துவிட்ட ஜெனீபரின் கனவெல்லாம் ஹீரோயின் ஆவது தானாம்.எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பளர்களையும், இயக்குனர்களையும் சந்தித்து பேசிவாய்ப்பு கேட்டு வருகிறார்.9ம் வகுப்பு படித்துக் கொண்டே சினிமாவிலும் சான்ஸ் வேட்டை நடத்தும் ஜெனீபருக்கு நேருக்கு நேர் படத்தில் நடித்ததற்காகஒரு பத்திரிக்கையின் சினிமா விருது கிடைத்ததாம்.ஆனால், கில்லி தான் தன்னை அடையாளம் காட்டியதாகக் கூறுகிறார். அதில் கண்ணாடி போட்டுக் கொண்டு குண்டு பாப்பாவாககாமெடியான தங்கச்சியாக நடித்திருந்தார் ஜெனீ. அந்தப் படத்தைத் தொடர்ந்து காமெடி கேரக்டர்களாகவே தேடி வந்தனவாம்.ஆனால், தன்னை கோவை சரளா மாதிரி ஆக்கி காலி பண்ணிவிடுவார்கள் என பயந்து போன ஜெனீபர் (இவர் இருப்பதுஹீரோயின் கனவில்) அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லி தட்டிக் கழித்துவிட்டாராம்.ஜாம்பவான் தவிர சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்திலும் நடித்துக் கொண்டிக்கும் ஜெனீபருக்கு எஸ்எஸ்எல்சி முடிக்கும்முன் ஹீரோயினாகி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட ஆசையாம்.அதற்காக தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறார்.

ஜெனீபரின் ஹீரோயின் ஆசை கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனீபர் இப்போது ஜாம்பவான் படத்திலும் பிரஷாந்துக்கு தங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.இவர் ஒரு வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறாராம். கிழக்குக் கரை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாராம்.(அப்படி ஒரு படம் வந்ததாகவே ஞாபகம் இல்லையே).இதுவரை 25 படங்களில் குட்டி, துக்கடா வேடங்களில் நடித்துவிட்ட ஜெனீபரின் கனவெல்லாம் ஹீரோயின் ஆவது தானாம்.எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பளர்களையும், இயக்குனர்களையும் சந்தித்து பேசிவாய்ப்பு கேட்டு வருகிறார்.9ம் வகுப்பு படித்துக் கொண்டே சினிமாவிலும் சான்ஸ் வேட்டை நடத்தும் ஜெனீபருக்கு நேருக்கு நேர் படத்தில் நடித்ததற்காகஒரு பத்திரிக்கையின் சினிமா விருது கிடைத்ததாம்.ஆனால், கில்லி தான் தன்னை அடையாளம் காட்டியதாகக் கூறுகிறார். அதில் கண்ணாடி போட்டுக் கொண்டு குண்டு பாப்பாவாககாமெடியான தங்கச்சியாக நடித்திருந்தார் ஜெனீ. அந்தப் படத்தைத் தொடர்ந்து காமெடி கேரக்டர்களாகவே தேடி வந்தனவாம்.ஆனால், தன்னை கோவை சரளா மாதிரி ஆக்கி காலி பண்ணிவிடுவார்கள் என பயந்து போன ஜெனீபர் (இவர் இருப்பதுஹீரோயின் கனவில்) அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லி தட்டிக் கழித்துவிட்டாராம்.ஜாம்பவான் தவிர சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்திலும் நடித்துக் கொண்டிக்கும் ஜெனீபருக்கு எஸ்எஸ்எல்சி முடிக்கும்முன் ஹீரோயினாகி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட ஆசையாம்.அதற்காக தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனீபர் இப்போது ஜாம்பவான் படத்திலும் பிரஷாந்துக்கு தங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் ஒரு வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறாராம். கிழக்குக் கரை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாராம்.(அப்படி ஒரு படம் வந்ததாகவே ஞாபகம் இல்லையே).

இதுவரை 25 படங்களில் குட்டி, துக்கடா வேடங்களில் நடித்துவிட்ட ஜெனீபரின் கனவெல்லாம் ஹீரோயின் ஆவது தானாம்.எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பளர்களையும், இயக்குனர்களையும் சந்தித்து பேசிவாய்ப்பு கேட்டு வருகிறார்.

9ம் வகுப்பு படித்துக் கொண்டே சினிமாவிலும் சான்ஸ் வேட்டை நடத்தும் ஜெனீபருக்கு நேருக்கு நேர் படத்தில் நடித்ததற்காகஒரு பத்திரிக்கையின் சினிமா விருது கிடைத்ததாம்.

ஆனால், கில்லி தான் தன்னை அடையாளம் காட்டியதாகக் கூறுகிறார். அதில் கண்ணாடி போட்டுக் கொண்டு குண்டு பாப்பாவாககாமெடியான தங்கச்சியாக நடித்திருந்தார் ஜெனீ. அந்தப் படத்தைத் தொடர்ந்து காமெடி கேரக்டர்களாகவே தேடி வந்தனவாம்.

ஆனால், தன்னை கோவை சரளா மாதிரி ஆக்கி காலி பண்ணிவிடுவார்கள் என பயந்து போன ஜெனீபர் (இவர் இருப்பதுஹீரோயின் கனவில்) அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லி தட்டிக் கழித்துவிட்டாராம்.

ஜாம்பவான் தவிர சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்திலும் நடித்துக் கொண்டிக்கும் ஜெனீபருக்கு எஸ்எஸ்எல்சி முடிக்கும்முன் ஹீரோயினாகி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட ஆசையாம்.

அதற்காக தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil