சிம்புவுக்கும் எனக்கும் சண்டையா?.. நல்லவனுக்கு நல்லவன்.. கெட்டவனுக்கு கெட்டவன்.. ஜீவா சரவெடி பதில்!

சென்னை: நடிகர் ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் இடையே சண்டை என பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு பெரிய பஞ்சாயத்து வெடித்தது. அந்த சர்ச்சைக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என சமீபத்தில் நடைபெற்ற ஃபேன்ஸ் மீட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகர் ஜீவா ஓபனாக பதில் அளித்துள்ளார்.

ஜீவா, ராஷி கன்னா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். விஜய்யுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் விஜய் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Jiiva Simbu Aghathiyaa

விஷால் மற்றும் சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற கேள்வியை எழுப்பிய ஜீவா அந்த நடிகர் சங்க கட்டடத்தை விஷால் எப்போது கட்டி முடிப்பார் என்றும் கேட்டுள்ளார்.

சிம்புவுடன் சண்டையா?: எனக்கும் சிம்புவுக்கும் சண்டை என பல வருடங்களுக்கு முன்பு சில பத்திரிகைகள் கொளுத்திப்போட்டது. அப்போதே அப்படியெல்லாம் இல்லை என வெளிநாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக இணைந்து மேடையில் அறிவித்து நடனம் எல்லாம் ஆடினோம். சிம்புவும் நானும் தி நகரில் ஒரே தெருவில் தான் வசித்து வந்தோம். இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறினார்.

கெட்டவனுக்கு கெட்டவன்: சிம்பு எனக்குப் போட்டியா என்கிற கேள்விக்கு கூடவே இருக்கும் நண்பன் முதுகில் குத்தினால் எப்படி இருக்கும் என பேசியதை அப்படியே திரித்து பிரச்சனையை பெரிதாக்கி விட்டனர் என்று பேசிய ஜீவா, நீங்க அவ்ளோ சாஃப்ட்டான பெர்சனா என தொகுப்பாளினி கேட்டதும் அப்படியெல்லாம் இல்லை நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என தக் லைஃப் பதிலை சொல்லிவிட்டார் ஜீவா.

அகத்தியா கை கொடுக்குமா?: ஸ்ட்ராபெர்ரி, ஆருத்ரா படங்களை இயக்கிய பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அகத்தியா படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகிறது. புதையல் வேட்டை படமாக உருவாகியுள்ள இந்த படம் பிளாக் படத்தைத் தொடர்ந்து ஜீவாவுக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஜீவா தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவது வரவேற்கத்தக்க விஷயம் என ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X