ஹனிமூன் முடிஞ்சதும் அந்த மாதிரி சீன்.. என் பொண்டாட்டி என்ன பண்ணா தெரியுமா?.. ஜீவா ஓபனா சொல்லிட்டாரே!

சென்னை: நடிகர் ஜீவா நடித்த படங்களிலேயே ரசிகர்களுக்கு இன்னமும் ஃபேவரைட் படங்கள் என்றால் அது சிவா மனசுல சக்தி மற்றும் கோ உள்ளிட்ட படங்கள் தான். அதிலும், சிவா மனசுல சக்தி படம் கடந்த ஆண்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜீவா மற்றும் அனுயா இருவரும் பல வருடங்கள் கழித்து கலந்துக் கொண்ட கலாட்டா சேனலின் ஃபேன்ஸ் மீட் வீடியோ யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

அந்த படத்தில் இருவரும் நடித்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது நடிகர் ஜீவா தனக்கு திருமணமாகி ஹனிமூனுக்கு சென்று வந்த உடனே சில கசமுசா காட்சிகளில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Jiiva Anuya Aghathiyaa

சிவா மனசுல சக்தி படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்த படமென்றால் அது தளபதி விஜய்யின் நண்பன் படம் தான். ஆனால், அந்த படத்தில் இருவரும் ஜோடி இல்லை என்பது தனிக்கதை.

ஜீவாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுயா: இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ம் தேதி சிவா மனசுல சக்தி படம் வெளியானது என ஜீவாவே கூறியுள்ளார். கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து சிவா மனசுல சக்தி படத்தின் நினைவலைகளில் மிதந்த காட்சிகள் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ஜீவாவுக்கு திடீர் சர்ப்ரைஸ் ஆக அனுயா வந்தது அவரை ஆச்சர்யப்படுத்தியது.

Jiiva Anuya Aghathiyaa

ஹனிமூன் முடிந்த கையோடு: நடிகர் ஜீவா சுப்ரியா என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்று வந்த நிலையில், இந்த படத்தில் அனுயாவுடன் நடித்தேன். அப்போது சில கசமுசா காட்சிகள், கிளாமர் காட்சிகளை படமாக்கினார்கள். என் மனைவி என்ன பார்த்து முறைக்க ஆரம்பிச்சிட்டா. நல்லவேளை அனுயாவும் என் மனைவியும் நல்ல தோழிகளாக மாறிய நிலையில், எந்த பஞ்சாயத்தும் ஏற்படாமல் தப்பித்துவிட்டேன் என ஜீவா தனது ஸ்டைலில் செம ஜாலியாக பேசியுள்ளார்.

அகத்தியா வருது: கடந்த ஆண்டு பிரியா பவானி சங்கருடன் இணைந்து ஜீவா நடித்த பிளாக் திரைப்படம் சைஃபை த்ரில்லராக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இண்டியானா ஜோன்ஸ் போல ஜீவாவின் அடுத்த படமான அகத்தியா உருவாகி வருகிறது. பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் அகத்தியா படத்தில் அர்ஜுன், ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த மாதம் 28ம் தேதி படம் வெளியாக காத்திருக்கிறது.

Jiiva Anuya Aghathiyaa

எஸ்எம்எஸ் 2 வேணும்: சிவா மனசுல சக்தி படத்திற்கு பிறகு தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த அனுயா பிக் பாஸ் போட்டியாளராகவும் கலந்துக்கொண்டார். ஆனால், பெரியளவில் ஷைன் ஆகவில்லை. சிவா மனசுல சக்தி 2ம் பாகம் வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் பலரும் ஜீவாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஜீவாவின் காமெடி டைமிங்கை முழுவதுமாக எடுத்துக் காட்டிய படம் என்றால் அந்த படம் மட்டும் தான். அதற்கு பிறகு அப்படியொரு படம் ஜீவாவுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X