சிவகார்த்திகேயன் பேசிய அத்தனையும் பொய்?.. விஜய் போனே எடுக்கலையா?.. பிரபலம் என்ன இப்படி சொல்றாரு?
சென்னை: இந்த பொங்கல் ஜன நாயகனா? பராசக்தியானு பிரிச்சு பார்க்காதீங்க, இந்த பொங்கல் அண்ணன் - தம்பி பொங்கல் என்று பராசக்தி இசை வெளியீட்டு விழா மேடையில் சிவகார்த்திகேயன் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில், சுமார் 7,8 நிமிடங்கள் ஜன நாயகன் படம் குறித்தும், விஜய் குறித்தும் பேசி இருந்தார் சிவா. அதிலும் குறிப்பாக, தான் விஜயின் மேலாளர் ஜெகதீஷை தொடர்பு கொண்டு பேசியதாகவும், விஜய் இரண்டு படங்களும் ஒன்றாக வருவதற்கு சம்மதம் என்று தெரிவித்து விட்டதாவும், வாழ்த்து தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
இப்படி இருக்கையில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் சிவகார்த்திகேயன் விஜயிடம் பேசவே இல்லை. அது எல்லாம் பொய் என்று தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சந்தேகம்: அந்த பேட்டியில், " இந்த சூழ்நிலையில் தீவிரத்தை சிவகார்த்திகேயன் புரிந்து கொண்டு பேசியதற்கு பாராட்டு. இல்லையென்றால், சிவகார்த்திகேயனை நம்பி பணம் போட்டவர்களுக்கு பாதிப்பு தான். விஜய் ரசிகர்கள் இருக்கும் வேகத்திற்கு, பராசக்தி படத்தின் பாக்ஸ் ஆபீஸில் தாக்கம் இருக்கும். அண்ணன் - தம்பி பொங்கல் என்று அவர் கூறிய வரைக்கும் சரி. அதன் பின்னர் சிவா பேசும்போது, தான் விஜயின் மேலாளர் ஜெகதீஷிடம் பேசியதாகவும், அவர் விஜயிடம் பேசிவிட்டு தனக்கு வாழ்த்து சொல்ல சொன்னதாகவும் கூறினார்.
சிவாவை தள்ளி வைக்கிறாரா விஜய்?: நான் என்ன கேட்கிறேன் என்றால், நீங்கள் விஜயிடம் பேச முடியாதா? விஜய் உங்களிடத்தில் பேச மாட்டாரா? விஜயிடம் பேச முடியாத உயரத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? நடுவில் எதற்கு மேலாளர் என்ற ஒருவர்? அப்படி என்றால் இது எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி வருகிறது தானே? இதுவேம் விஜயிடம் தான் பேசியதாக சொல்வதில் என்ன தயக்கம்? அப்படியானால் விஜய் உங்களைத் தள்ளி வைக்கிறார் தானே? தன்னிடம் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் தான் சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்பதன் உட்பொருள் தானே அது.

விஜய் ரசிகர்கள்: சிவகார்த்திகேயன் ஏன் விஜயிடம் பேசாமல் ஜெகதீஷிடம் பேசுகிறார் என்றால், இடையில் ஏதோ பிரச்னை உள்ளது, அதனால் சிவகார்த்திகேயன் இப்படிச் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் மனதில் எந்த கறையும் இல்லை என்றால் விஜய் போன் நெம்பரை வாங்கி நேரடியாக பேச வேண்டியது தானே? இதை பூசி மெழுக நினைக்கிறார். அது விஜய் ரசிகர்களிடம் நடக்காது" என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது திரைத்துறையில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











