கெனிஷா ஏற்கனவே திருமணமானவர்.. கோவா பப்பில் பாடுவது தான் அவர் வேலை.. பிரபலம் பேட்டி!
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணத்திற்கு ரவி மோகன், கெனிஷா உடன் கை கோர்த்தபடி வந்திருந்தார். அது பேசு பொருளாள நிலையில், ஆர்த்தி உருக்கமான அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் வரவேற்புக்கும் கெனிஷாவுடன் வந்தது அதிர்வலையே ஏற்படுத்தியது. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பேசுபொருளாகி இருப்பது ஜெயம் ரவி கெனிஷா விவகாரம் தான். ஜெயம் ரவியே இப்படி செய்துவிட்டாரே என்று தான் பலரும் புலம்பி கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு நடிகரின் விவாகரத்தும் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஜெயம் ரவியை ஒரு நடிகர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் ஒரு அன்பானவர், நல்ல கணவர் என்றே மக்கள் பார்த்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜெயம் ரவி, ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்காக பல காரணங்களை கூறியிருந்தார் அதில், ஆர்த்தி தன்னை கொடுமைப்படுத்தினார். அவமதித்தார், சந்தேகப்பட்டார் என குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஆனால், அது எல்லாம் பொய் என்பது, தற்போது ஐசரி கணேஷ் அவர்களின் மகளின் திருமணத்தில் அவர் வந்த விதத்தை பார்த்து மக்கள் தெரிந்து கொண்டார்கள்.

ஏற்கனவே திருமணமானவர்: அதேபோல கெனிஷாவிற்கு பெரிய பாரம்பரிய குடும்பம் எல்லாம் எதுவும் இல்லை, ஜெனிஷா பெங்களூருவில் பிறந்தவர். தற்போது கோவாவில் வசித்து வருகிறார். கெனிஷாவிற்கு ஏற்கனவே மூன்று நபருடன் தொடர்ந்து இருந்து பின் அதில் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நபர் யார்.. திருமண வாழ்க்கை என்ன ஆனது.. அவர் உயிரோடு தான் இருக்காரா.. இப்படி எந்த தகவலும் யாருக்குமே தெரியாமல் ஒரே மர்மமாக உள்ளது. இதுபற்றி, கெனிஷா வெளிப்படையாக ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும். அதைவிட்டு விட்டு இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக, அவர் என் வாழ்க்கை மாற்றிவிட்டார் என்று சொல்லுவது சரியில்லை.
பப்பில் பாடினார்: ஆனால், ஜெயம் ரவியின் ரசிகர்கள் ஆர்த்தியின் அறிக்கையை பார்த்துவிட்டு, கெனிஷா என்ற பெண்ணை ஒரு அருவருப்பான பெண்ணாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். அதற்கு காரணம் அவரின் ஆபாச உடை, ஒரு திருமணத்திற்கே அவர் ஆபாசமான உடையில் தான் வந்திருந்தார். ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கெனிஷா திறமையான பெண், 60 மேடைகளில் பாடி இருக்கிறார் என்று சொன்னார். ஆனால், அவர் கோவாவில் இருக்கும் 'பப்பு'களில் தான் பாடியிருக்கிறார். அப்படி, ஜெயம் ரவி பப்பிற்கு சென்ற போது தான் கெனிஷாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயம் ரவி சொல்வது போல கெனிஷா திறமையான பெண்ணெல்லாம் இல்லை.
ஆர்த்தி உடன் வாழ்ந்தபோது தனது பெயரை ஜெயம் ரவி என வைத்துக்கொண்டார். இப்போது கெனிஷாவுடன் உறவு வந்த பின் தனது பெயரை ரவி மோகன் என மாற்றி உள்ளார். ஜெயம் ரவியின் தந்தை மோகன் உண்மையிலேயே கடுமையான ஒரு உழைப்பாளிஇ உழைத்து தான் அவர் இந்த இடத்திற்கு வந்தார். அவரின் குடும்பமே நல்ல குடும்பம் தான். அதே போல ஜெயம் ரவியும் மோசமானவர் என்று சொல்லிவிட முடியாது, அப்படிப்பட்ட இவர் எப்படி இப்படி மாறினார் என்பதுதான், என்னுடைய கேள்வியும் பலரின் கேள்வியும் அதுவாகத்தான் உள்ளது என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











