மிஷ்கின் ஒரு ஞான கிருக்கன்.. அவர் சினிமாவைவிட்டு போனா போகட்டும்.. பிரபலம் பேட்டி!
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பறந்து போ'. இப்படத்தில்
கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஜூலை 4ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய மிஸ்கின், என்னை நிறைய சினிமா நிகழ்வுக்கு கூப்பிடுறாங்க. தயவு செய்து என்னை கூப்பிடாதிங்க. அப்படி கூப்பிட்டால் ரூ.5 லட்சம் கொடுங்க. குடும்ப செலவுகளுக்கு ஆகும். சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது என்று பேசி இருந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா BBTCinema யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், மிஷ்கின் உண்மையில் ஒரு பெரிய அறிவாளி தான், நிறைய புத்தகங்களை படித்து இருக்கிறார். ஹைக்கூ லெவல் அதிகமாக இருக்கும் குழந்தைகள் எப்படி துறுதுறுவென்று இருப்பார்களோ அதேபோலத்தான் மிஷ்கினும் ஒரு சுறுசுறுப்பான குழந்தை. அதை சிலர் சாதகமாக பயன்படுத்துக்கொண்டு அவரை அழைத்து வந்து மேடையில் பேசவைக்கிறார்கள். அது தான் மிஷ்கின் விஷயத்தில் நடக்கிறது. இதற்கு முன் பலமுறை மிஷ்கின் சினிமாவை விட்டு போவதாக சொல்லி இருக்கிறார். இவர் சினிமாவால் என்ன மாதிரியான காயத்தை, வலியை அவர் அனுபவித்தார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அதனால், கூட அவர் இப்படி சொல்லி இருக்கலாம். இவர் சினிமாவை விட்டுப்போனால் பெரிதாக ஒன்றும் நடந்து விடாது, அவர் இடத்திற்கு வேறு ஒரு மிஷ்கின் வருவார் அவ்வளவு தான்.

பத்திரிக்கையாளர் சே குவேரா: ஆனால், சினிமா வரலாற்றில் மிஷ்கினின் பெயர் நிச்சயம் இருக்கும் ஏன் என்றால், பேய் படம் என்றால், தியேட்டரில் அனைவரும் பயந்து நடங்குவார்கள். ஆனால், பிசாசு என்ற படத்தை எடுத்து, அதில், பேயை தேவதையாக காட்டி இருந்தார், பிசாசு படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தவர்கள் கண்கலங்கி அழுதார்கள். இப்படி ஒரு படத்தை கொடுத்த மிஷ்கினை நிச்சயம் சினிமா மறக்காது, அதற்காக, சினிமாவை விட்டு போகக்கூடாது என்று காலை பிடித்து கெஞ்சாது என்பதை மிஷ்கின் புரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது ஒரு அதிசயம், யாரை தூக்கிவிடும், யாரை கீழே தள்ளும் என்று யாருக்கும் தெரியாது. சினிமாவை யாரும் புரிந்த கொள்ளவே முடியாது, சினிமா என்பது பெரிய கடல், பெரிய விடுகதை என்பதை மிஷ்கின் புரிந்து கொள்ள வேண்டும்.
மிஷ்கின் இயக்குவதை நிறுத்திவிட்டு, நடிகராக போகிறேன் என்று கூட சொல்லி இருக்கலாம். அவர் உண்மையில் ஒரு நல்ல நடிகர். அண்மையில் அவர் நடித்த டிராகன் படத்தை இரண்டு முறை பார்த்தேன். அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருந்தார். மிஷ்கின் சினிமாவில் இருந்தால் நல்லது, இல்லை என்றால், சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பு ஒன்றும் கிடையாது, இவர் போனால், இவர் இடத்திற்கு வேறு ஒரு மிஷ்கின் வருவார் என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











