கிழவனுக்கு லிப்லாக் சீன் கேக்குதா? சிம்பு நடித்திருக்கவே கூடாது.. தக் லைஃப் படத்தை விளாசிய பிரபலம்

சென்னை: மணிரத்னத்தின் இயக்கத்தில் நேற்று தியேட்டரில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், சிம்பு, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி, பகவதி, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் கலவையான விமர்சனத்தை பெறும் நிலையில், படம் குறித்து சினிமா விமர்சகர் சேகுவேரா BBTCinema யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமல் மணிரத்னத்துடன் இணைந்து இருக்கிறார். சிம்பு முதல் முதலாக கமலுடன் இணைந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், படம் அட்டகாசமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்வேன் என நினைத்தீர்களா... அப்படி நான் சொல்ல மாட்டேன். இந்த திரைப்படத்தில் சிம்பு நீளமான முடி வளர்த்திருக்கிறார், அதேபோல, இடைவெளிக்கு பின் கமலஹாசன் நீளமான முடி வளர்த்திருக்கிறார். அதேபோல, அபிராமி மனநலம் பாதிக்கப்பட்டு முடியை வெட்டி கொள்கிறார். அதேபோல த்ரிஷாவும் ஒரு விபத்தில் சிக்கி முடியை இழந்து விடுகிறார். மொத்தத்தில் படம் முழுக்க அதை சுற்றியே இருக்கிறது.

Thug life kamal che guevara

இது தேவையா?: சிம்புவிற்கு அப்பா ஸ்தானத்தில் இருக்கும் கமல், விலைமாதுவாக நடித்திருக்கும் த்ரிஷாவின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இடைவேளைக்கு பிறகு, அம்மா, அண்ணி ஸ்தானத்தில் பார்க்க வேண்டிய த்ரிஷா பின் சிம்பு சுத்துகிறார். இதை எப்படி தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது தான் தக் லைஃப் திரைப்படம் அடிவாங்கியதற்கு முக்கிய காரணமே. இதுபோன்ற ஒரு கதையை மணிரத்னம் எடுத்தாலும், இப்படி ஒரு படத்தில் நடிக்க கமல் எப்படி சம்மதித்தார். இந்த வயதில் முத்தக்காட்சி தேவையா. இப்படி ஒரு மோசமான ரோலில் நடிக்க சிம்பு எப்படி சம்மதித்தார். மணிரத்னம் கூப்பிட்டார் என்பதற்கான எந்த மாதிரியான கதை என்று கூட பார்க்காமல் சிம்பு நடித்துவிடுவாரா, என்னதான் படமாக இருந்தாலும், அதில் ஒரு நியாயம், தர்மம் வேண்டாமா.

சிம்பு நடித்து இருக்கவே கூடாது: சிம்பு இந்த படத்திற்கான பல படத்தை புறக்கணித்து இருக்கிறார். சிம்பு நடிக்கவேண்டிய படம் தான் புறநானூறு, தக் லைஃப் படத்திற்காக அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அந்த படம் தான் இப்போது பராசக்தி என்கிற பெயரில் வெளியாக உள்ளது. சிம்புவிற்கு முன் இந்த படத்தை ரவிமோகனிடம் தான் கதையை சொல்லி இருக்கிறார்கள் அவர், கதையை கேட்டுவிட்டு மறுத்து இருக்கிறார். அதன் பின் தான் சிம்பு இந்த படத்திற்கு கமிட்டாகி மாட்டிக்கொண்டார். இந்த படத்தில் வில்லனே சிம்பு என்பது போலத்தான் கதையை முடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்பு நடித்து இருக்கவே கூடாது, படம் மொத்தமாக கூத்திக்கொண்டது, நாலு நாள் மட்டும் தான் ஓடும். திங்கட் கிழமைக்கு பிறகு, தக் லைஃப் படம் ஓடாது என சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

படத்தின் கதை: டெல்லியில் கேங்க்ஸ்டர்களான மாணிக்கம் (நாசர்) - ரங்கராய சக்திவேல் (கமல்). சட்டவிரோத தொழில்களை செய்து டெல்லியின் நிழலுக தாதாக்களாக இருக்கிறார்கள். திடீரென ஒரு நாள் இவர்களின் ஏரியாவுக்குள் போலீஸ் இறங்கி கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. இந்த கலவரத்தில் கமலின் உயிரை சிறுவனான சிம்பு காப்பாற்றுகிறான். இதனால் சிம்புவை கமல் வளர்ப்பது மட்டுமில்லாமல், அதிகாரத்தையும் அவனிடம் கொடுக்கிறார். இதை அண்ணன் நாசரால் ஏற்றுக்கொள்ள முடியாததால், சிம்புக்கும், கமலுக்கு இடையே பகையை உண்டாக்கி மோதவிடுகிறார். இந்த மோதலில் என்ன நடந்தது என்பது தான் 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X